பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 43 இப்பா லின் முதல் மூன்று அடிகள் வானவர்.முதல் நாரணன் வரை உள்ளவர்களின் பட்டியலைத் தருகின்றன. போக போக்கியங்களுக்கே உரிமையுடைய புரந்தரன், அறிவுக்குத் தெய்வமாகிய கலைமகள், அபெளர்ஷேயம் ஆகிய வேதம், அதனை ஓயாது ஒதுகின்ற நான்முகன், செல்வத்தின் நிலைக்களனாம் நாரணன் என்பவர்களோடு 'மா ஏறு சோதி என்ற தொடரும் இடம்பெற்றுள்ளது. இத்தொடர் யாரைக் குறிக்கின்றது என்பதில் கருத்து வேற்றுமை உள்ளது. ஒரு சாரார் சூரிய, சந்திரர் என்றும் சைவசித்தாந்த அடிப்படையாளர் உருத்திரன் என்றும் பொருள் கொண்டுள்ளனர். இந்த இரண்டு விளக்கங்களுமே பொருத்தமுடையன வாகத் தோன்றவில்லை. இதன் உண்மைப் பொருள் விளங்கவில்லை. இறைவனுடைய பெருமையை மூன்று அடிகளில் சிறப்பித்துக் கூறிவிட்டு அத்தகைய ஒருவன் திருவடியைப் பாடுவாயாக என்று முடிக்கின்றார். சே ஏறு சேவடி’ என்பதற்கு இ. . வாகனத்தின் மேலுள்ள என்று பொருள் கூறுவர். அதைவிட, செம்மை நிறம் மிகுதியும் ஏறியுள்ள திருவடி. என்று பொருள்கொள்வது சிறப்புடையது போலத் தோன்றுகிறது. வண்டுகள் நிற வேறுபாட்டை நன்கு அறிவன ஆதலின், திருவடியை எளிதாகக் கண்டுகொள்ள லாம் என்ற பொருள் தொனிக்க, சிவந்த திருவடி என்றார். 216. நான் ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் தேன் ஆர் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 2