பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 நான் யார்-ஆன்மாவாகிய நான் யார். உள்ளம்ஆன்மாவிற்குச் சிறந்த கரணமாய் நன்மை தீமைகளை அறியச் செய்யும் மனம். பலி-பிச்சை. தேனார் கமலம்-திருவடித்தாமரை. எவ்வகையில் பார்த்தாலும் எளிதாகப் பொருள்கூற முடியாத சிக்கல் நிறைந்த பாடலாகும் இது. ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு வடிவு கொடுத்துப் பாடுவதே ஒரு கவிதையின் இயல்பாகும். அறிவு, கற்பனை என்பவற்றின் துணைமட்டும் கொண்டு பாடப்பெறும் எல்லாப் பாடல்களுக்கும் பொது இயல்பாகும் இது. - ஆனால், உணர்ச்சியைப் பிழிந்து கொடுக்கும் திருவாசகப் பாடல்களில் இத்தகைய கட்டுப்கோப்பையும் கவிதைக்குரிய வரன்முறையையும் காண முற்படுவது பொருந்துவதாக இல்லை. எண்ணக்கோவைபோல, உணர்ச்சி கோவையாக வருவதில்லை. எனவே, முதலடி யிலிருந்து நான்காம் அடிவரையில் ஒரு கருத்து, வளர்ச்சி, தொடர்பு என்பவை முறையாக இப்பாடல்களில் இடம் பெறவில்லை. உணர்ச்சியால் உந்தப்பெற்ற எண்ணச் சிதறல்கள் அடுத்தடுத்து வைக்கப்பெறுதலின் கருத்துக் கோவையை இப்பாடல்கள் பெற்றிருக்கவில்லை. சொற்கள் அமைந்தி ருக்கும் விதம் எப்படி வேண்டுமானாலும் பொருள் செய்ய உதவுகின்றது. மேலே உள்ள நானார்” என்ற பாடலுக்கு மரபுபற்றிப் பொருள் கூறுபவர்கள் மதி மயங்கி என்ற சொல்லுக்கு அருளது மிகுதியால் என்றும் சிவபெருமான் என்றும் பொருள் கூறியுள்ளனர். அன்றியும், இவன் ஆட்கொள்ளத் தககவனா, அல்லாதவனா, என்றுகூட ஆராயாமல் மதிமயங்கி ஆண்டுகொண்டான் என்று விரித்துரைப்பவர்