பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 45 களும் உளர். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, முதலிரண்டு அடிகளுக்கும் வேறு வகையில் பொருள் செய்யலாமோ எனத் தோன்றுகிறது. வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் என் மதிமயக்கத்தால் நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்ற வினாக்களுக்குப் பொருள் தெரியாமல் இருந்திருப் பேன். அன்றியும் யார் என்னை அறிந்துகொள்ள முடியும் என்ற இறுமாப்பும் அங்கு இருந்திருக்கும். அவன் என்னை ஆள்வதற்கு முன்னர் நான் யார் என்ற வினாவிற்கு என் மதி மயக்கம் காரணமாக, நான் திருவாதவூரன் இப்பாண்டி நாட்டு அமைச்சனும் நானே என்று சொல்லித் திரிந்தேன். 'என் உள்ளம் ஆர்’ என்ற வினாவை எழுப்பிக் கொண்டு திருவாதவூரனாகிய என்னுடைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என் உள்ளம், அந்த உள்ளத்தை ஆட்சி செய்பவன் நானே என்று நினைத்துத் திரிந்தேன். 'ஞானங்கள் ஆர்' என்ற வினாவை எழுப்பிக் கொண்டு என் அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து அந்த ஞானத்தை அபர ஞானம், பரஞானம் என்று பிரித்து, அபர ஞானத்தில் எல்லையில்லாத பேரறிவு படைத்தவன் நான் என்று நினைத்துத் திரிந்தேன். ‘என்னுள்ளமார், ஞானங்களார்' என்ற இரண்டு இடங்களிலும் 'ஆர்' என்ற சொல் எது அல்லது யாது என்ற அஃறிணைச் வினாச்சொல்லின் உயர்திணை வடிவாக இடம் பெற்றுள்ளது. வானோர் பிரான் என்னை ஆள்வதற்குமுன், என்னுடைய கல்வி, கேள்வி, ஞானம், பாடும் திறன், அதிகாரம், பதவி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு