பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 திருவாதவூரனாகிய என்னை штri முழுவதுமாக அறியமுடியும் என்று இறுமாந்திருந்தேன். இவையெல்லாம் நிகழ்வதற்குக் காரணம் இரண்டு உண்டு. முதலாவது, இயல்பாகவே எனக்குரிய மதிமயக்கம்; இரண்டாவது, அந்த மதிமயக்கத்தைப் போக்கக்கூடிய திருவருள் அப்பொழுது எனக்குக் கிட்டாமை ஆகும். வானோர் பிரான் என்னை ஆள்வதற்கு முன்னிருந்த நிலை இதுவாகும். என்ன அதிசயம்! திருப்பெருந்துறையில் திருவடி தீட்சை செய்த ஒரே வினாடியில் என் மதிமயக்கத்தைப் போக்கினார் குருநாதர். அந்த மயக்கம் போனவுடன் எல்லாவற்றிலும் ஒரு புதிய காட்சி தோன்றலாயிற்று. புதிதாகப் பிறந்த தெளிவு டன், பழைய வினாக்களை மறுபடியும் சிந்திக்கத் தொடங் கினேன். நான் யார் என்ற வினாவிற்குத் திருவாதவூான் என்ற விடை வரவில்லை. தெளிவு காரணமாகக் குருநாதர் திருவடியில் கட்டுண்ட ஒர் அடிமை; எனக்கென்று ஊர், பெயர் எதுவுமில்லை என்ற விடை பிறந்தது. 'என் உள்ளமார் என்ற அடுத்த வினா எழும்பிற்று. எனக்கே சிரிப்பு வந்துவிட்டது. காரணம் நான் என்ற ஒன்றே இல்லாதபோது, எனக்கென்று ஒர் உள்ளம் இருப்பதாக நினைத்து, அது யார் அல்லது எது என்று ஆய்வது அர்த்தமற்றது. பிரான் ஆள்வதற்கு முன்னர் எனக்கு என்று ஒர் உள்ளம் இருந்தது. சில சமயங்களில் என்வழி அதுவும், பல சமயங்களில் அதன்வழி நானுமாகச் சென்று கொண்டிருந்தோம். பிரான் ஆண்ட பிறகு, எனக்கென்று ஒர் உள்ளம் இல்லை. என் சித்தத்தில் அவன் புகுந்துவிட்ட காரணத்தால், அந்த உள்ளத்திற்குரிய தனித் தன்மை நீங்கி, அது அவன் தங்குமிடமாக மாறிவிட்டது.