பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி - 47 அடுத்து ஞானங்கள் ஆர்' என்ற வினாத் தோன்றிற்று. நான் என்ற ஒரு பொருள் தனித்து நிற்கையில்தான் அந்த நானால் அறியப்படும் ஞானம் பற்றிய பிரச்சினை தோன்றுகிறது. அந்த நான் வசிக்கும் இப்பிரபஞ்சம் பற்றிய ஞானத்தை அபர ஞானம் என்றும், அதனைக் கடந்து நிற்கும் ஞானத்தைப் பர ஞானம் என்றும் கூறினார்கள். முன்னதில் அதிகமும், பின்னதில் ஒரளவும் அறிவின் துணைகொண்டு அந்த நான் புகுந்தது. இப்பொழுது நானே இங்கில்லை. திருவடியில் தஞ்சம் அடைந்தபொழுதே என்னுடைய நான் செத்துவிட்டது. அது போனமையால் அதுபற்றிய அறிவும் மாய்ந்துவிட்டது. அந்த அறிவு மாய்ந்தபிறகு பர ஞானம், அபர ஞானம் என்ற பிரிவிற்கோ அவைபற்றிய ஆராய்ச்சிக்கோ இங்கே இ.மேயில்லை. இனி, நான்காவதாக உள்ளது என்னை யார் அறிவார்’ என்பதாகும். பிரான் என்னை ஆள்வதற்கு முன்னர்த் திருவாதவூரன் என்றும், பாண்டிய அமைச்சன் என்றும் மிகப் பலர் அறிந்திருந்தனர். பிரான் என்னை ஆண்டுகொண்ட பிறகு என்னில் நிகழ்ந்த இம்மாற்றங்களை யார் அறியமுடியும்? ஒருவரும் அறியவில்லை என்றபடி, பாடலின் முதலிரண்டு அடிகளில், இரண்டு நிலைகள் பேசப்பெறுகிறது. பிரான் ஆள்வதற்கு முந்தைய நிலை; ஆண். பிந்தைய நிலை. இதனை முழுமாற்றம் (Metamorphosis) ςτςίτρJ & JJguri. ஒரு தனி மனிதரை, மாபெரும் பதவி வகித்த ஒர் அமைச்சரை ஒரே விநாடியில் அவரின் மதிமயக்கத்தைப் போக்கி, இத்தனை மாற்றங்களையும் செய்தவன் மிகமிகப் பெரியவனாகத்தான் இருக்க வேண்டும். ஒர் அமைச்சரை ஆண்டியாக்கியவன் அமைச்சரைவிடப் பெரும் பதவியில் இருப்பவன் என்று பலர் நினைக்கலாம் அல்லவா?