பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இல்லை என்கிறார் அடிகளார். அதாவது இந்த மாற்றங்களைச் செய்தவன் மண்டையோட்டில் பிச்சை எடுத்து உண்பவன்; தனக்கென்று ஒரு தனி வீடுக.ட இல்லாமல் அம்பலத்தே (வெட்டவெளி) ஆடுபவன் என்று கூறுகிறார் அடிகளார். இங்குக் கூறப்பெற்ற பொருள் பாடலிலுள்ள சொற் களைக் கொண்டுகட்டுச் செய்து பெற்ற பொருளன்று. பாடலின் சொற்கள் அமைந்துள்ள முறையில் மனத்திடைத் தோன்றிய இறைச்சிப் பொருளாகும் இது. 217. தினைத்தனை உள்ளது ஒர் பூவினில் தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசும்தொறும் எப்போதும் அனைத்து எலும்பு உள் நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி 3 மேல் 215ஆம் பாடலில் மூன்று அடிகளில் இறைவன் பெருமையைக் கூறினார்; அத்தகையவன் புகழை ஒதுவாயாக என்றார். வண்டு அவ்வாறு செய்யவில்லை யென்று தெரிகிறது. ஏன்? அன்றாடம் வாழ்க்கை நடத்த, வயிற்றை நிரப்பப் பாடுபட்டுச் செல்லும் வண்டு, நாள் முழுவதும் அப்பணிக்கே செலவிடுதலின் இறைவன் புகழை ஊத நேரமேது? எனவே, இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். வண்டுமுதல் மனிதர்வரை ஒரு புதிய செயலில் ஈடுபட வேண்டுமேயானால், அச்செயலின் பயன் உடனடியாகக் கைக்கு வரவேண்டும். அவ்வாறில்லாமல், "இதனைச் செய்தால் என்றோ ஒருநாள் பெருநலம் கிட்டும் என்று எவ்வளவு எடுத்துக் கூறினாலும் சாதாரண உயிர்கள் அதனைக் கடைப்பிடிப்பது கடினம். கிட்டடியான ஊதியம் கிட்டாததால் வண்டு இறைவன் புகழை ஊதவில்லை என்பதைக் கண்ட