பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 49 அடிகளார், இப்பாடலின் இாண்டு அடிகளில் வண்டு இறைவன் புகழைப் பாடினால் உடனே கைமேல் பலன் கிடைக்கும் என்ற கருத்தைப் பெறவைக்கிறார். மலரிலிருக்கும் தேன் தினையைவிடச் சிறிய அளவுடையதாகும். அதனை உண்ணுகின்ற ഖ് (ി நூற்றுக்கணக்கான மலர்களில் அமர்ந்து தேனை உறிஞ்சிய பிறகுதான் தன் பசியைப் போக்கிக்கொள்ள முடியும். அவ்வாறில்லாமல் மலரிலுள்ள தேனைப்பற்றி நினைத்த உடனேயோ, தேனையுடைய ഥണ്ഡങ്ങIT് கண்டவுடனேயோ குறிப்பிட்ட இடத்தில் தேன் இருக்கிறது என்று பல வண்டுகள் ஒன்றுகூடிப் பேசும்போதோ முழுமையான இன்பமும் அவைகளுக்கு ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக இறைவனை நினைத்தவுடன் இன்பம் ஏற்படுகிறது: கண்டவுடன் ஆனந்தம் பிறக்கிறது; தம்மையொத்த பலர் கூடி அவன் புகழைப் பேசும்போது எல்லையற்ற இன்பம் ஏற்படுகிறது. இம்மூன்றிலும் ஈடுபட்டுப் பழகிவிட்டால் இவையல்லாத பிற நேரங்களிலும் அந்த இன்பம் ஏற்படுகிறது. அம்மட்டோ! தேனை உண்ணும்பொழுது நாவில் சுவை தட்டுகிறது; வயிறு நிரம்புகிறது. இதனால் தோன்றும் இன்ப உணர்ச்சி எலும்பை உருக்குகின்ற அளவிற்குச் செல்வதில்லை. தேனுக்கில்லாத, எலும்பை உருக்கும் இச்சிறப்பு, இறைவன் புகழுக்குமட்டுமே உண்டு. ஆம். அவன் புகழைப் பாடும்போது அனைத்து எலும்பும் உருகும்; உள்ளேயும் உருகும். ஒவ்வொரு பூவிலும் ஒரு சொட்டுத் தேனை உண்டுவிட்டு அடுத்த மலாைத் தேடிச் செல்கின்றவரையில் எவ்வித இன்பமும் இல்லை. மலர் கிடைத்தாலும் ஒரு துளி இன்பம்தான் கிட்டும். இதன் எதிராக இறைவன் புகழைப்