பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பாடும்போது ஆனந்தத் தேன் சொட்டுச் சொட்டாக வராமல் தாரையாகச் சொரிகின்றது. குனிப்புடையான்' என்ற சொல்லுக்கு நட்டம் ஆடுபவன் என்ற பொருளைக் கொண்டுள்ளனர் சிலர். அப்பொருளும் ஏற்குமேனும் வளைதல்' என்ற பொருள் இன்னும் பொருத்தமுடையதுபோலத் தெரிகின்றது. குனித்த புருவம், குனித்த வில் என வரும் தொடர்களைக் காண்க குனிப்புடையான் என்பதற்கு வளைந்துள்ளவன் என்று பொருள் கூறினால் அது எவ்வாறு பொருந்தும் என்று ஐயுறுவார், உடலளவில் வளைவு என்று பொருள் கொள்ளாமல், கருணை அளவில் குனிப்புடையான் எனப் பொருள் கொள்ள வேண்டும். வளைதல் என்பது நட்டமாக நிற்கும் தன் நிலையிலிருந்து இறங்கி வளைதலைக் குறிக்கும். அண்ட பிண்ட சராசரங்களை யெல்லாம் கடந்து உயர்ந்து நிற்கும் அவன் கருணை, உயிர்கள்மாட்டுக் கொண்ட பேரிரக்கத்தால் வளைந்து வந்து அவ்வுயிர்களை அணைத்துக்கொள்கிறது. இந்தக் குறிப்பையே குனிப்புடையான் என்ற சொல்லால் அடிகளார் குறிப்பிட்டார். தினைத்தனை தேனைக் கொண்ட ஒவ்வொரு பூவாக தேடிச்சென்று, முயன்று, அத்தேனைச் சேகரிப்பதைக் காட்டிலும், ஒரே இடத்திலிருந்து, ஒருவனைமட்டும் நினைந்து, அதனினும் மேம்பட்ட இன்பத்தைப் பெறலாம் என்று கூறுவது இப்பாடலின் தனிச் சிறப்பாகும். 218. கண்ணப்பன் ஒப்பது ஒர் அன்பு இன்மை கண்டபின் என் அப்பன் என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்து என்னை வா என்ற வான் கருணைச் கண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பி 4