பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 51 அடிகளார் போன்ற அருளாளர்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. உலகப் பொருள்கள் எதிலும் நாட்டம், விருப்பு, பற்று என்ற எதுவும் கொள்ளாமல், மேலோங்கி நிற்பவர்கள் இவர்கள். இவர்கள் வாழ்க்கை முழுவதையும், அன்பு என்ற ஒன்று. பின்னிப் பிணைத்துக்கொண்டுள்ளது. என்றாலும், அன்பு என்ற இந்த ஒரு பகுதியில் மட்டும் அவர்கள் திருப்தி அடைவதே இல்லை. தம்மிடம் உள்ள அன்பு, எந்த நிலையிலும் முழுத் தன்மை பெற்றதாக அவர்கள் கருதுவதே இல்லை. இதற்கொரு காரணமுண்டு, இவர்கள் நினைக்கின்ற அளவிற்கு அந்த அன்பு வளர்ந்துவிட்டால், இந்த உடலை விட்டு நீங்கி, இறைவன் திருவடிகளில் ஐக்கியமாகியிருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். - இந்த உடம்பும், உடம்பு பற்றிய நினைவும், உடம்புக் குரிய சில செயல்களும் அடிகளார் போன்றவர்களுக்கு இந்நிலையிலும் இருந்ததாகலின், தங்களுடைய அன்பு முழுத் தன்மை பெறவில்லை என்றே கருதினர். கண்ணப்பர் ஒருவர்மட்டும், இந்த விதிக்கு விலக்காக வாழ்ந்தார் என்று இவர்கள் கருதினர். கண்ணப்பருக்கு உடம்பு இருந்தது. ஆனால், காளத்தி மலையைக் கண்டதிலிருந்து உடம்பு பற்றிய நினைவு (தேகப் பிரக்ஞை) அவர்பால் இல்லை. உணவு, உறக்கம் என்ற இரண்டையும் முற்றிலுமாக மறந்துவி...ார். ஆதலின், உடலுக்குரிய செயலும் திண்ணனாரிடம் இல்லை. உடம்பு மட்டும் இருந்தது உண்மை. ஆனால், அந்த உடம்பு, உச்சந்தலை யிலிருந்து உள்ளங்கால்வரை அன்புப் பிழம்பாக இருந்தது என்பதை அடிகளாரும் சேக்கிழாரும் நன்கு அறிந்திருந்தனர். அதனாலேயே கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை என்று அடிகளார் பாடுகிறார் -