பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 இனி, கண்ணப்பன் ஒப்பு: என் ஒப்பு என்று பிரித்து எடுத்துக் கொண்டு, கண்ணப்பன் ஒப்பு அன்பு என் ஒப்பு (அன்பு இன்மை என்று பொருந்திப் பார்த்தால் ஒரு புதிய சிந்தனை தோன்றுகிறது. அதாவது ஒப்பு நோக்கம் செய்தால் அன்புடைமைக்கு ஒரு எல்லையாக நிற்கின்றார் திண்ணனார்; அஃது இன்மைக்கு ஒரு எல்லையாக நிற்கின்றேன் நான்’ என்றவாறு. 219. அத் தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ங்ன் பொய்த் தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே g பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றி நின்ற மெய்த் தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பி 5 பொய்த்தேவு-பொய்யான தெய்வங்கள். பத்து-பற்று. அறிவு வளர்ச்சியின் தொடக்கத்தில் உள்ளவர்களும் முழுத்தன்மை அடையாதவர்களும், இறை இலக்கணத்தை நன்கு அறியார். அவர்கள் தன்னலத்தையே அடிப்படை யாகக் கொண்டு வாழ்வதால் தத்தம் அறிவுக்கு ஏற்பச் சிறு தெய்வங்களை முதற்கடவுள் என்று கொண்டனர். இன்று மிக உயர்த்திப் பேசப்பெறும் இருக்குவேதம்கூட இந்திரனையே முதல் தெய்வம் என்று பேசுகிறது. இங்குக் கூறப்பெற்ற தெய்வங்களை வழிபடுபவர்கள் தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி, அவை நிறைவேறுமாறு இத்தெய்வங்கள் உதவவேண்டும் என்றே வேண்டுவர். வாழ்க்கையில் பற்றுடையவர்கள் வழிபடும் சிறு தெய்வங்கள், இவர்கள் பற்று நிறைவேற உதவுகின்றனவே தவிர, பற்றற்ற நிலைக்கு இவர்களை இட்டுச் செல்வதில்லை. இக்கருத்தை மனத்துட்கொண்ட அடிகளார், பற்றற்ற நிலையைத் தரக்கூடிய ஒருவன் உண்டு என்கிறார். அத்தகைய ஒருவனையே தம் உள்ளம் பற்றி நின்றது ஆதலின், தம் பற்றை அறுக்க முடிந்தது என்கிறார்.