பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி அதனை அறுக்க உதவிய ஒருவனே மெய்த்தேவனாக இருக்க முடியும் என்று தருக்க ரீதியாக இறைவன் பெருமையை நிலைநாட்டுகிறார். 220. வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ 6 குறிக்கோள் இன்னதென்று அறியாது வாழும் மக்கள் நிறைந்த உலகைப் பித்த உலகம் என்றார். இதில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் சித்த விகாரம் இருந்து வருகிறது. சித்த விகாரம்' என்பது ஆழ்மனத் திரிபு என்ற பொருளைத் தரும். இந்த மனத்திரிபுக்கு ஆதாரமாக இருப்பவை எவை? பிறந்த குலம், வைத்த செல்வம், இடையே வந்த பெண்டிர், இடையே வந்த மக்கள், இடையே வந்த கல்வி என்பவைகளாம். இவை எவ்வாறு சித்த விகாரத்திற்குக் காரணமாயின? உலகில் உடம்பெடுத்தபொழுதுதான் மேலே கூறிய தொடர்புகள் இடம்பெறலாயின. உடம்பில் உயிர் இருந்தும் மயக்கம் முதலியவை வந்துற்றபோது வைத்த நிதி முதல் குலம், கல்வி வரையில் அனைத்தும் பொருளற்றவை ஆகிவிடுகின்றன. அப்படிப்பட்ட நிலையில்லாத இவற்றைத் தம்முடையது என்று கருதும் அறியாமையை- திரிபுணர்ச்சியைச்- சித்தவிகாரம் என்றார் அடிகளார். மேலே கூறிய அனைத்தும் உலகிடை வாழ்பவருக்கு இயல்பாக அமைந்துள்ளன. அவற்றோடு கலந்து வாழ்க்கை நடத்தும்போதேகூட, இவை என்னுடையவை என்றும், என்னுடைய மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவை என்றும் நினைப்பது அறியாமையின்பாற்படும். இவற்றிடையே இருந்து