பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 கொண்டு வாழும்பொழுதுகூட எனக்கும் இவற்றிற்கும் நிலையான தொடர்பு ஒன்றுமில்லை என்று உணர்வது சித்தத் தெளிவாகும். அதேபோல இறப்பு என்பது இயல்பாக நடைபெறு கின்ற ஒன்று. வாழ்க்கைப் பயணத்தில் இறப்பு என்பது ஒரு நிலை என்று உணர்வது சித்தத் தெளிவு. அவ்வாறின்றி அது கண்டு அஞ்சுவது சித்தக் கலக்கம். இதனையே இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் என்றார் அடிகளார். கல்வி முதலியவற்றால் மேலே கூறியவை நம்மிலும் வேறுபட்டவை, நிலையில்லாதவை, இடையே வந்து போகின்றவை என்பதை அறிவு சுட்டிக் காட்டினாலும், வாய் கிழியப் பேசினாலும் ஒருவருடைய உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ள இந்த எண்ணங்களை அறிவின் துணைகொண்டோ, தன்னிச்சையாகவோ போக்கிவிடுதல் இயலாத காரியம். இறைவன் துணை என்ற ஒன்று இருந்தாலொழியச் சித்த விகாரத்தைப் போக்குதல் இயலாத காரியம். சித்த விகாரத்தை ஏற்படுத்துகின்றவற்றைப் பட்டியலிட் டுக் காட்டியுள்ளார் அடிகளார். இதில் கல்வியைக் கூறியது சற்று வியப்பை அளிப்பதாகும். கல்வி என்னும் அல்கடல் பிழைத்தும் (திருவாச4-38) என்று முன்னரும் கூறியுள்ளார். இங்குக் கூறப்பெற்றது, அறிவையும் அகங்காரத்தையும் வளர்க்கும் ஏட்டுக் கல்வியையே தவிர, பண்பாட்ட்ையும் மெய்ஞ்ஞானத்தையும் வளர்க்கும் கல்வியை அன்று. 'சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த என்ற தொடரில் உள்ள தெளிவித்த என்ற சொல் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியது. அந்நாளில், கலங்கியுள்ள நீரைத் தெளிவிப்பதற்கு தேத்தாங் கொட்டையை நீருள்ள பாத்திரத்தின் உள்ளே உரைத்து விடுவர். சற்று நேரத்தில் நீர் சுத்தமாகத் தெளிந்துவிடும். அதுபோலக் குலம், கல்வி முதலிய மாசுகள் கலந்துள்ள