பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 55 சித்தத்தைத் தெளிவிக்க வேண்டுமானால் இறையருள் என்ற தேத்தாங் கொட்டையை அந்தச் சித்தத்துள் தேய்க்க வேண்டும். அப்பொழுது சித்தம் தானே தெளிந்து விடும். இதனையே கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்' என்கிறார் அடிகளார். கலக்கம் தெளிவித்த தேவர் என்று சொல்லாமல் வித்தகத் தேவர் என்று கூறியதன் காரணமென்ன? கலக்கத் தைத் தெளிவிக்க அத்தேவர் பல்வேறு விதமான வழி களைக் (வித்தைகளைக் கையாள்கிறார். குருவடிவாக நேரே வந்தும், சாதாரண மானிட வடிவுடன் அடியார்களின் எதிரே வந்தும், இவை இரண்டுமே இல்லாமல் அந்தரியாமியாய் உள்ளே நின்றும் பல்வேறு வழிகளில் சித்தக் கலக்கத்தைத் தெளிவித்தலின் அவனை வித்தகத் தேவர் என்றார். 221. சட்டோ நினைக்க மனத்து அமுது ஆம் சங்கரனைக் கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம் சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய் கோத்தும்பி 7 சட்டோ-விரைவாக சற்று. சிட்டாய-அறிவுடைப்பொருளாகிய, நுட்பமாகிய என்றுமாம். சட்ட என்கிற சொல்லுக்கு அகராதி நான்கு பொருள்களைத் தருகிறது. அவையாவன செவ்விதாக, நன்றாக, முழுதும், விரைவாக என்பவையாகும். இந்த நான்கு சொற்களில் எதனை வைத்துக்கொண்டாலும் 'நினைக்க' என்ற சொல்லுடன் பொருந்தி அழகாகப் பொருள் தருகின்றது. இதே சொல்லைவைத்து அடிகளார் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் 469ஆம் பாடலில் சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன்' என்று பாடுகின்றார். மேலே சட்ட என்பதற்குப் பொருளாகத் தரபெற்ற நான்கும்