பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இராஜராஜன் தேவாரத்தைக் கண்டு எடுத்தான் என்ற கட்டுக்கதை வரலாற்று அடிப்படையில் ஆய்வோர்க்குச் சிரிப்பைத்தான் உண்டாக்கும். ஏறத்தாழ இந்தக் காலகட்டத்தில்தான் திருவாசகத்திலும் பல பாடல்கள் மறைந்துதொழிந்தன. அதில் ஒரு பகுதிதான் இப்பதிகத்தின் மூன்று பாடல்களும். இதேபோன்று திருவாசகத்தின் பிற்பகுதியிலும் பல பாடல்கள் மறைந்தொழிந்தன. ஜி.யு. போப் என்ற மேலைநாட்டு அறிஞர் இறையனு பவத்தைப் பிழிந்து தரும் திருவாசகத்தைப் போன்ற என்பை உருக்கும் பாடல்களை உலக இலக்கியத்தில் வேறெங்கும் காணமுடியாது என்று எழுதியுள்ளார். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாசகத்தைக்கூடக் காணாமல் போகச்செய்யும் பெருமை நமக்கே உரியதாகும். திருக்கழுக்குன்றப் பதிகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அடிகளாரைப் பொறுத்தமட்டில் திருப்பெருந்துறை அனுபவத்திற்குப் பிறகு பற்பல புதுமைகள் நிகழ்ந்துள்ளன. இறைவன் குதிரைச் சேவகனாக வந்தது, மண் சுமந்தது ஆகிய பல நிகழ்ச்சிகள் திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகுதான் நிகழ்ந்தன. அடிகளார் to jol) திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்ட திகழ்ச்சிகளும் ஆங்காங்கே திருவாசகத்தில் பேசப்பெறுகின்றன. என்றாலும், தம்முடைய வாழ்க்கையைத் திசை திருப்பிய குருநாதர் வடிவத்தை அடிகளார் மறக்கவே இல்லை. அந்தக் குருநாதர் வடிவு தில்லைக் கூத்தனின் மற்றொரு சொரூபம் என்று தெரிந்தும்கூடத், தில்லைக் கூத்தனைக் காண்பதைக் காட்டிலும் குருநாதர் வடிவைக் காண்பதில் அடிகளார் அதிகம் ஈடுபாடு கொண்டார். என்று தெரிகிறது. தில்லைக்கூத்தன் தரிசனந்தான் இறுதிப் பயன். ஆனால், அதை எவ்வாறு பெறுவது? காண்பார்