பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றப் பதிகம் 119 யார், காட்டாக்காலே என நாவரசர் பெருமான் கூறியது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. அதாவது, திருவாதவூரராகிய மனிதருக்கு முதற்பொருளைக் குருநாதர் காட்டினாலொழியக்காணமுடியாது. ஆதலால், காட்டிய குருநாதரிடம் தலையாய ஈடுபாடு ஏற்பட்டது. உத்தரகோசமங்கை முதலிய பல ஊர்களுக்கும் சென்று வழிபட்ட அடிகளார், அந்தந்த ஊர்களில் திருக்கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதுடன், எங்கேயாவது ஒர் இடத்தில் முன்னர்க் கண்ட குருநாதர் தரிசனமும் அடியார் கூட்டத் தரிசனமும் கிட்டாதா என்ற அங்கலாய்ப்புடன் தேடிவந்துள்ளார் என்பது தெரிகிறது. திருப்பெருந்துறையில் “தில்லைக்கு வருக” என்று குருநாதர் ஆணையிட்டதால் அங்கே சென்றால் இவை இரண்டும் கிட்டும் என்ற நினைவோடு தில்லைக்கு வருகிறார். ஆனால், இவற்றில் ஒன்றுகூடக் கிட்டவில்லை. பொன்னம்பலக் கூத்தனைக் கண்டுகொண்டே, அடியார் கூட்டம் காட்ட மாட்டாயா என்று தொடங்கி, கோயில் மூத்த திருப்பதிகம் முழுவதிலும் தாம் விரும்பிய எதுவும் கிட்டவில்லை என்பதை வெளிப்படுத்தி வருந்துவதைக் காணலாம். என்ன காரணத்தாலோ தில்லைக் கூத்தன் அடிகளார் விரும்பிய இரண்டையும் தில்லையில் அருளவில்லை. அந்த நிலையில் செத்திலாப் பத்து முதலிய பதிகங்களைப் பாடிவிட்டுத் திருக்கழுக்குன்றம் செல்கிறார். திருக்கழுக்குன்றத்தை அடைகின்றவரையில் தம்முடைய இரண்டு. ஆசைகளும் அந்த ஊரில் நிறைவேறும் என்று அடிகளார் எதிர்பார்த்ததாகத் தெரியவில்லை. எதிர் பார்த்ததை, எதிர்பார்த்த நேரத்தில் தராமல், எதிர்பாராத நேரத்தில் தருவதுதான் கூத்தனின் திருவிளையாடல் போலும்.