பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருவாசகம் - சில. சிந்தனைகள் - 4 திருக்கழுக்குன்றம் சென்றவுடன் கழுக்குன்ற நாதனைப் பாடாமல், பிணக்கிலாப் பெருந்துறைப் பெருமான்!” என்று தொடங்கிப் பாடுகிறார். இறுதி அடியில் கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்று முடிப்பதால் பெருந்துறைப் பெருமான் என்று இப்பாடலில் குறிப்பிடுவது குருநாதரையே என்பது தெளிவாகும். இவ்வடி, அடிகளாரின் ஆசைகளின் முதற்பகுதி நிறைவேறியதை அறிவிக்கின்றது. 474 ஆம் பாடலில் 'எனைக் கயக்கவைத்து அடியார் முனே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே’ என்று பாடுவதால் அவருடைய இரண்டாவது ஆசையும் நிறைவேறியது என்பதை அறிகிறோம். திருப்பெருந்துறையில் தோன்றிய இந்த இரண்டு ஆசைகளும் தில்லையில் கைகூடாமல் திருக்கழுக்குன்றத்தில் நிறைவேறியதால் இப்பதிகம் தனிச்சிறப்பைப் பெறுகிறது என்பது பெற்றாம். இந்த நுணுக்கத்தை அறிந்த முன்னோர் இப்பதிகத்திற்குச் சற்குருதரிசனம் என்று உள்தலைப்புத் தந்தது முற்றிலும் பொருத்தமாகவே உள்ளது. 468. பிணக்கு இலாத் பெருந்துறைப் பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு இணக்கு இலாதது ஒர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் உணக்கு இலாதது ஒர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின் கணக்கு இலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 1 எந்த உயிரையும் வேண்டா என்று வெறுத்து ஒதுக்காமல் ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவன் ஆதலின், எவ்வுயிருடனும் பிணக்கில்லாத பிணங்கிக்கொள்ளாத)