பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 155 மேலே கூறப்பெற்ற மூன்றும் அடுத்தடுத்து நிகழ்ந்தாலும் இவை நிகழ்வதற்குக் காரணமாக இருந்தவர் யார்? குருநாதர் என்று சொல்லத் தேவையில்லை. அவர் எவ்வாறு இவற்றைச் செய்தார். அறுத்தல், நிரப்புதல், வளரச்செய்தல் ஆகியவற்றை மனிதர்களைப்போலக் கருவி கொண்டு செய்தாரா என்று ஐயுறுவார்க்கு விடைகூறுவார் போல வான் கருணை தந்தானை என்கின்றார். கருணையைத் தருதல் ஒன்றுமட்டுமே அவன் செய்த காரியம். நுண்மையானதும், கண்ணுக்குத் தெரியாததும் ஆகிய அந்தக் கருணை மிக நுண்மையாக யாரும் கண்களால் காணமுடியாத மலம் அறுத்தல், அன்பு நிறைத்தல், ஒளி வளர்த்தல் ஆகிய மூன்று செயல்களையும் முறையே செய்துவிட்டது என்க. 'நான்கு மறை பயில் தில்லை’ என்பதற்கு நான்கு வேதங்களும் பயிலப்படும் தில்லை என்பது ஒரு பொருளாகும். நம்முடைய கற்பனையை நீட்டி வேறொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். தில்லை அம்பலத்தில் அவன் ஆடிக்கொண்டுதான் இருக்கிறான். ஆட்டத்தை நிறுத்தினானில்லை. அவ்வாறு ஆடிக்கொண்டிருக்கும் பொழுதேகூட ஐந்தொழில்களையும் (படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்) அவன் செய்கின்ற இடம் தில்லை. இதனை நான்கு செயல்களோடு மறைத்தலாகிய செயலையும் நிகழ்த்துகிற (பயில்) தில்லை என்ற கருத்தில் 'நான்கு மறை பயில் தில்லை என்று பாடுகிறார். இவ்வாறு பொருள் கூறுவதை இறைச்சிப் பொருள் என்பர். 484. பூதங்கள் ஐந்து ஆகிப் புலன் ஆகிப் பொறி ஆகிப் பேதங்கள் அனைத்தும் ஆய்ப் பேதம் இலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஒளியை மரகதத்தை வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்கு தில்லை கண்டேனே 10. கேதம் - துன்பம்.