பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்பாடலின் தனிச்சிறப்பு ஒன்றுக்கொன்று முரண்பாடுடைய பொருள்களை ஒன்றாக இணைத்து அவை அனைத்தினுள்ளும் இறைவன் நிறைந்துள்ளான் என்று கூறுவதாகும். அதாவது, முரண்பாடுகளினிடையே அவற்றை ஊடுருவியும், தனித்தும் நிற்கும் சிறப்புடையது முழுமுதல் என்ற பேருண்மை, இந்நாட்டவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு கூறிய ஒன்றாகும். இக்கருத்தை வலியுறுத்தவே முரண்பட்ட பொருள்களை வரிசைப்படுத்துகிறார் அடிகளார். ஒன்றுக்கொன்று மாறுபட்டுள்ள ஐம்பெரும் பூதங்கள், மாறுபட்ட செயற்பாடுடைய மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகள்-அவற்றின் பொருளாக அமைந்துள்ள சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற ஐந்து புலன்கள்-இவற்றையல்லாமல் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வடிவு, உருவு, குணம், செயல் ஆகியவற்றையுடைய பொருள்களைப் ‘பேதங்கள் அனைத்தும் ஆய் என்றார். காரணம் புறவடிவு, தன்மை என்பவற்றில் இப்பொருள்கள் மாறுபட்டு இருப்பினும் இவை அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாய் இருப்பவன் அவனே ஆதலின் இவ்வாறு கூறினார். பேதம் உடைய இப்பொருளிடத்து அந்தர்யாமியாய் இருப்பினும் அவனிடத்து எவ்வித பேதமும் இல்லையென்பார் பேதமிலாப் பெருமையனை என்றார். ওঁ ওঁ ওঁb