பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. பிரார்த்தனைப் பத்து |சதா முத்தி) பிரார்த்தனை என்ற வட சொல் (பிரா+அர்த்) மிகுதியும் வேண்டுதல் என்ற அடிப்படைப் பொருளோடு இறைவனை வேண்டுதல் என்ற பொருளையும் தந்துநிற்கும். இதுவரை கண்டுள்ள பல பாடல்களும் அடிகளார் இறைவனை நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனையாக இருக்கவும் இப்பதிகத்திற்குமட்டும் பிரார்த்தனைப் பத்து என்ற தலைப்பு ஏன் தரப்பெற்றுள்ளது என்பது தெரியவில்லை. அடிகளார் இரண்டு வேண்டுதல்களை அடிக்கடி இறைவனிடம் விண்ணப்பிக்கின்றார். முதலாவது, மீண்டும் குருநாதர் தரிசனம் கிடைக்கவேண்டும் என்பது. இரண்டாவது, மீட்டும் அடியார் கூட்டத்தினிடையே இருக்கும் அருளைப் பெறவேண்டும் என்பது. கோயில் மூத்த திருப்பதிகத்தின் முதற் பாடலிலேயே கூட அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்” என்று தொடங்கி, அதே கருத்தை, அப்பதிகத்தின் பிற பாடல்களிலும் குறிப்பிட்டுச் சொல்கின்றார். அப்படியானால் அடியார் நடுவுள் இருக்கவேண்டும் என்ற வேண்டுதல் புதிதாக இங்குப் பேசப்படவில்லையே! அப்படியிருக்க, பிரார்த்தனைப் பத்து என்ற தலைப்புக் கொடுத்து இந்தப் பதினொரு பாடல்களைத் தனியே பிரித்து அமைத்துள்ளதன் நோக்கம் என்ன? அந்தாதித் தொடையில் அமைந்துள்ள இந்தப் பதினொரு பாடல்களையும் ஒருமுறை படித்துப் பார்த்தால்