பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 377 இந்தக் கூலியாள் வாங்கியுண்டது சாதாரணப் பிட்டு; ஆயிரக்கணக்கானவர் அன்றாடம் உண்டு வயிற்றை நிரப்பும் மிக எளிய ஆகாரமாகும் இது. இந்தப் பிட்டை வாங்கி உண்டுவிட்டு, அதற்குப் பதிலாக என்ன பயனைத் தந்தான் தெரியுமா அப்பித்தன்? அப்பிட்டைத் தந்தவளுக்கு வீடுபேற்றை அல்லவா நல்கினான்! - ஒரு பிடி அரிசிப் பிட்டிற்காக வீடுபேற்றை அல்லவா விற்றுவிட்டான். ஆதலால், அவனைப் பித்தன் என்கிறார் என்று பொருள் கொள்வதில் தவறில்லை. 470ஆம் பாடலின் இரண்டாமடியில் வரும் 'விலங்கினேன்’ என்ற சொல் அடிகளார் மனநிலையைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது. பெருந்துறைக் குருநாதர் அடியார் கூட்டத்திடையே தம்மை இருக்கச்செய்து, அடுத்து உடனே மறைந்துவிட்டார். மறைந்தது குருநாதர் செயலே; அச்செயலுக்கு அடிகளார் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டார். - அடியார் கூட்டத்திடை இருக்குமாறு செய்தவரும் குருநாதர்; அவர்களிடையே அடிகளாரைத் தங்குமாறு செய்தவரும் குருநாதர்; அடிகளாரை விட்டுவிட்டு அடியார்களோடு மறைந்தவரும் குருநாதர். அடிகளாரை, அடியார் கூட்டத்தோடு செல்ல வொட்டாமல் தடுத்து நிறுத்தியவரும் குருநாதர்தானே! இதனை உள்ளவாறு பாடுவதாய் இருப்பின், விலக்கினாய்’ என்று சொல்லி இருக்க வேண்டும். குருநாதர் செய்த காரியத்திற்குத் தம்மை பொறுப்பாக ஆக்கிக்கொண்டு நான் விலகிவிட்டேன்’ (விலங்கினேன்) என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? தருக்க ரீதியாக இக்கூற்றுப் பொருந்தா விடினும், இந்தச் சொல்லாட்சி ஒரு கருத்தை வலுவாக எடுத்துக்காட்டுகிறது. அடியார் கூட்டத்துடன் உடன்செல்லாதது தம் குறையே என்றும், அதற்குக் காரணமாக இருந்தது இந்தப் பூதவுடலே தி.சி.சி.IV 25