பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 என்றும், இதுவரை பலப்பலப் பாடல்களில் அடிகளார் கூறிவருகிறார். இங்கேயும் அதே கருத்துப் பேசப்பெறுகிறது. அதிலும் சிறப்பாக விலங்கினேன்’ என்ற சொல்லுக்கு முன்னும்பின்னும் பயன்படுத்தப் பெறும் சொற்களை, கருத்துக்களை இணைத்துச் சிந்தித்தால் விலங்கினேன்' என்ற சொல்லின் ஆழம் நன்கு வெளிப்படும். ‘எப்படிப்பட்டவரை விட்டுவிட்டு விலங்கினேன் தெரியுமா? கொஞ்ச உபகாரமா செய்தார் அவர் மலங்கி நின்ற என் கலக்கத்தைப் போக்கினார். அதுமட்டுமா? செய்வதறியாது திகைத்துக் கண்ணிர் சோர நின்ற என் கண்ணிரையும் அல்லவா மாற்றினார். எத்தனையோ பிறவிகளை நான் தாண்டிவந்தும் என்னையும் அறியாமல் மேலும் பிறவிகளைத் தர எனக்குப் பின்னே வரும் மலங்கள் அனைத்தையும் அழித்தார். என் வினையால் கேடு சூழப்பட்டவனாகிய என்னை மலங்கெடுத்து மாற்றினார். இவ்வளவு உபகாரங்களை அவர் செய்திருந்தும் அவரோடு சென்றிருக்க வேண்டும் என்பதை மறந்து, செய்வதறியாமல் திகைத்து, உடன்செல்லாமல் தங்கி விட்டேன். இவ்வாறு தங்கியதால் பெற்ற நட்டம் என்னுடையதேதவிர, குருநாதருக்கு எவ்விதக் குறையு மில்லை. ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் குருநாதருக்குக்கூட, ஒரு குறை ஏற்படுமாறு செய்துவிட்டேன். பெருந்துறையில் அவர் திருவடிகளை வைப்பதற்குரிய தாங்கு பலகையாக அல்லவா என் தலை இருந்தது. இப்பொழுது அவருடன் செல்லாமையால் அவர் சென்றுள்ள இடத்தில் திருவடிகளை வைப்பதற்குரிய இடம் அகப்படாமல் வருந்துவார். அவர் செய்த உபகாரங்களை மறந்தவனாகிய நான், அந்த உபகாரங்களுக்கு நன்றி பாராட்டாதவனாகிய நான் அவர் வருந்துவதற்கும் காரணமாக அமைந்துவிட்டதை நினைக்கும்போது எல்லையற்ற துயரத்திற்கு ஆளாகிறேன். (கலங்கினேன்). -