பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 379 'குருநாதரின் திருவடிகளைத் தாங்குகின்ற தாங்குபலகை என்னுடனேயே இருந்துவிட்டதை நினைந்துநினைந்து கலங்கினேன். அந்தக் கலக்கத்தைப் போக்கவேபோலும், கழுக்குன்றில் குருநாதரையும், அவர் திருவடிகளையும் காணும் வாய்ப்புப் பெற்றேன். என் தலை இல்லாவிடினும், அவருடைய திருவடிகள் ஏதோ ஒரு வைப்பிடத்தின்மேல் அமைந்திருந்ததைக் கண்டு இக்கலக்கம் தெளிந்தது' என்கிறார் அடிகளார். தோணியில் ஏறிக் கடலில் செல்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கை மனத்துட்கொண்டு அந்த இடத்திற்கே தோணியைச் செலுத்துவர். திருவாதவூரரென்ற அமைச்சர், அரசியல், சமூக இயல், வாழ்வியல் என்ற கடலிடை இதுவரை நீந்திவந்துள்ளார். நீந்திக் களைத்த அவருக்குத் திருப்பெருந்துறை என்ற ஞானத்தோணி கிடைத்தது. தம்மைச் சுற்றியிருந்த வாழ்வை உதறிவிட்டு அத்தோணி யில் ஏறி அமர்ந்து அதனைச் செலுத்தத் தொடங்கினார். தோணியைத் தந்தவர், அது எங்கே செல்லவேண்டும் என்பதை ஐயத்திற்கிடமின்றிக் கோலமார்தரு பொதுவினில் வருக' என்று ஆணையிட்டு மறைந்தார். . தோணியைச் செலுத்திய அடிகளார் பொதுவினில் சென்றபொழுது தோணிக்காரரைக் காணமுடியும் என்று நம்பினார். ஆனால், அந்தப் பொல்லாத தோணிக்காரர் அவர் கண்களில் தட்டுப்படவில்லை. வேறுவழியின்றித் தோணிக்கார ராகிய குருநாதரைத் தேடிக்கொண்டு ஊர்ஊராகச் செல்கிறார். அவர் எதிர்பார்த்த தில்லையில் காணப்படாத அந்தக் குருநாதர் சற்றும் எதிர்பாராத வகையில் கழுக்குன்றத்தில் காட்சி தருகிறார். அடிகளாரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதனையே பெருந்துறைப் பெருந்தோணிபற்றி உகைத்தலும் காணொணாததோர் கோலம் குருநாதர் கோலம்) நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே (47) என்று பாடுகிறார்.