பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 . இப்பிரபஞ்சம் முழுவதும் தோன்றுவதும் மறைவதும் மறுபடியும் தோன்றுவதும் காலம் என்று சொல்லப்படும் நான்காவது பரிமாணத்தில் (4th didmension) ஆகும் என்ற இன்றைய விஞ்ஞானக் கருத்தை மெய்ஞ்ஞானியாகிய அடிகளார் எட்டாம் நூற்றாண்டிலேயே கண்டு மிகத் தெளிவாகப் பாடியுள்ளார். இதனை மேலை வானவரும்' (திருவாச47) என்று தொடங்கும் திருச்சதகப் பாடலின் விளக்க உரையில் விரிவாகக் கூறியுள்ளோம். . முக்கூட்டுப் பரிமாணமுடைய இந்தப் பிரபஞ்சம் காட்சிக்கும் தொடு உணர்ச்சிக்கும் இடந்தந்து நிற்கிறது. ஆனால், காலம் ஆகிய நான்காவது தத்துவம், காட்சி முதலிய எதற்கும் கட்டுப்படாமல் நம்முடைய அறிவு, கற்பனை ஆகியவற்றிற்கும் கட்டுப்படாமல் விரிந்து நிற்கின்றது. சாதாரணமான காலக் கணக்கைப் பகல், இரவு, விண்மீ ன்களின் போக்குவரத்து ஆகியவற்றைக் கொண்டு நாம் கணக்கிடுகிறோம். ஆனால், காலதத்துவத்தை இந்த மாறுதல்களைக் கொண்டு கணக்கிட முடியாது. பகலையும் இரவையும் காணலாமே தவிர இந்தப் பகலும் இரவும் தோன்றி மறைவதற்குக் காரணமாகவுள்ள காலதத்துவத்தை எவ்விதத்திலும் நாம் காணமுடியாது. காலாத்த மூர்த்தி என்று சொல்லப்படும் இறைவன் இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலத்தையும் கடந்து நிற்பவன் ஆவான். ஆகவே, அவனைக் காணுதல் என்பது இயலாத காரியம். அப்படியிருந்தும், அடிகளார் காலதத்துவ சொரூபனே உனை நான் நச்சி நச்சி ஒத, என்மேல் கொண்ட கருணை காரணமாகக் கழுக்குன்றில் வந்து உன்னை நீ காட்டினாய்' என்று பாடுகிறார். குருநாதர் என்ற வடிவுக்கு உட்பட்டோ, அல்லது பெருந்துறை நாயகன் என்ற வடிவுக்கு உட்பட்டோ அவர்