பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 381 காட்சி தரும்பொழுது, அண்டம், பிண்டமாகக் காட்சி யளிக்கிறது என்பதை அடிகளார் உணர்கின்றார். இந்தப் பிண்டத்தை (குருநாதர் வடிவை அடிகளார் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து அண்டபேரண்டமும் அடங்க ஒரு நிறைவாகி ஆனந்த வடிவுடன் காட்சி தருவதை அவரால் காணமுடிகிறது. பந்துக்குள் அடைக்கப்படும் காற்று வெளியே தெரியாவிட்டாலும், பந்தின் வடிவை ஏற்று அதனுள் நிறைந்திருப்பதுபோல் கண்ணுக்குத் தெரியாத, கற்பனைக்கு எட்டாத, காலம் என்ற தத்துவம் குருநாதர் வடிவினுள் தங்கிவிடுகிறது. அதனையே காலமே உனை ஒத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே (472) என்று பாடுகின்றார். இறையருள் அனுபவத்தில் எந்நேரமும் மூழ்கித் திளைக்கின்ற அடிகளார் போன்றவர்களுக்குக்கூட, இப்பருவுடம்புடன் வாழ்கின்ற காரணத்தால் ஒரோவழி சாதாரண மக்களைப்போல் உலகியல் நிலைக்குத் திரும்பி அதன் நடைமுறைகளைக் கவனிக்கும் நிலை வந்து விடுகிறது. 'எனை நான் என்பது அறியேன் பகல் இரவாவதும் அறியேன்” என்பது இறையனுபவத்தின் அதீத நிலை. இந்த அதீத நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கு கின்ற சூழ்நிலைகளும் உருவாதல் கூடும். அந்தநிலையில் பிறர் பேசுவதில், ஒரு சில பகுதிகளில் நாட்டம் செல்லும், 'பித்தன்' என்று எனை உலகவர் பேசுவது ஒர் காரணம். 'இது கேளிர் (43) என்றும், நான் ஆர் என் உள்ளம் ஆர். ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்? (216 என்றும் பேசுவது இரண்டாவது நிலையாகும். இதனை அடுத்த மூன்றாவது நிலையில் சாதாரண மக்களைப்போலப் பிறருடைய பேச்சுக்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் நிலை தோன்றுகிறது.