பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்படிப்பட்ட மூன்றாவது நிலையில்தான் 473ஆம் பாடல் தோன்றுகிறது. + பிறரை ஏதிலார் என்றும், நண்பர் என்றும் பிரித்துக் காணுகின்ற நிலை நம்போன்ற சாதாரண மக்களின் மனநிலையாகும். அந்த நிலையில்தான் அவர்கள் பேசிய பேச்சுக்களை ஆராய்ந்து, இது ஏதமுடைய பேச்சு என்ற முடிவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது. இந்த மனநிலையில் நின்று அவர்கள் பேச்சைக் காதில் வாங்கிக்கொண்ட அடிகளாருக்குக் குருநாதர் செய்த செயலை உணரவோ அறியவோ உள்ள வாய்ப்பு நழுவிவிடுகிறது. ஆதலால்தான், "ஐயா! நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் என்ற கேள்வி பிறக்கிறது. முதல் நிலையில் அவர் ஆட்கொண்டதும், வினையைக் கெடுத்ததும் பிறவியை வேரறுத்ததும் அமுத தாரைகளை எற்புத் துளைதொறும் ஏற்றியதும் உணரும் வாய்ப்பு இருந்தது. இதனை அறிதல் முடியாது; உணரத்தான் முடியும். ஆதலால், உணரும் வாய்ப்பு என்று கூறுகிறோம். இரண்டாவது நிலையில் இந்த உணர்வுநிலை பெரும் பகுதி மழுங்கிவிட, அறிவு தலைப்பட்டுப் பணிசெய்யத் தொடங்குவதால், நான் யார் முதலிய வினாக்கள் தோன்றின. தம்மைப் பிறர் பித்தன் என்று ஏசுகிறார்கள் என்று அறிந்துகொள்வது அறிவின் செயற்பாடாகும். ஆனால், இந்த நிலையிலும்கூட ‘நான்ஆர் என்ற வினாவை அடுத்து, 'வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் என்ற உணர்வு, அறிவை அடக்கி மேலெழுகின்றது. அதேபோலப் பிறர் பைத்தியம் என்று கூறுவதைக் கேட்டவுடன் அந்தக் கூற்றிலுள்ள இகழ்ச்சிக் குறிப்புத் தெரிந்தாலும் அதுவரை வேலைசெய்த அறிவை மடக்கி உணர்வு மேலெழுகின்றது. அதன் பயனாகச் செத்துப் போய் அருநரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை அத்தன் ஆண்டு’கொண்டான் (43) என்ற அமைதி கிட்டுகின்றது.