பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 383 மூன்றாவது நிலையில் இந்த உணர்வு வெளிப்படவே 'யில்லை. அறிவுமட்டும் தொழிற்படுகின்ற காரணத்தால் ஏதிலார் பலர் காட்சியளிக்கின்றனர்; அவர்கள் பேசிய ஏதம் காதில் விழுகிறது; உணர்வு பணிபுரியத் தொடங்காமையால் சாதாரண மக்களைப் போல இந்த நிலைக்கு நீ என்னை ஆளாக்கிவிட்டாயே! என்ற துயரங் கலந்த குரல் வெளிப்படுகிறது. ஒரே பதிகத்தில் முதல் இரண்டு மூன்று பாடல்களில் முதல் நிலையும், அடுத்த இரண்டு பாடல்களில் இரண்டாவது நிலையும், இந்தப் பாடலில் 473 மூன்றாவது நிலையும் பேசப்பெறுவதைக் காண்கிறோம். குருதரிசனம், கணக்கிலாக் கோலம், கால தத்துவம் என்பதை உணர்ந்து பாடுவது முதல்நிலை: நாண் ஒணாத ஒர் நாணம் பற்றிப் பேசுவது இரண்டாவது நிலை; நீ எனை ஏதிலார் முன் என்செய்தாய்? என்று கேட்டது மூன்றாவது நிலை. 474 ஆம் பாடலின் நான்காவது அடியில் வரும் கயக்கம் என்ற சொல், எந்தக் கலக்கத்தைக் குறிக்கிறது: இதே பாடலில் துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு, நின் தூமலர்க் கழல் தந்தாய்’ என்று சொல்லுகின்ற வரையில் முன்னர்க் கூறிய முதல்நிலை இறையுணர்வில் முழுவதும் அழுந்திய நிலை பேசப்பெறுகிறது. நான்காவது அடியிலுள்ள அடியார் முனே வந்து காட்டினாய்’ என்பதில் குருநாதர் தரிசனம், அடியார் கூட்ட தரிசனம் என்ற இரண்டும் காட்டப்பட்டதால் முன்னர்க் கூறிய இறையனுபவ நிலை முழுத்தன்மை பெறுகிறது. இதனிடையே கயக்க வைத்து என்ற தொடர் எவ்வாறு புகுந்தது? ஆழ்ந்து சிந்தித்தால், இதற்கு முந்தைய பாடலில் பேசப்பெற்ற மூன்றாவது நிலையையே இத் தொடர் குறிக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.