பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்பகுதியில் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய பாடல்களில் தொடங்கிய இறையனுபவ நிலை ஆறாவது (473:பாடலில் முற்றிலும் இழக்கப்பெற்றுச் சாதாரண உலகியல் நிலைக்கு வந்து, மறுபடி ஏழாவது 474 பாடலில் ஒன்று, இரண்டு, மூன்றில் சொல்லப்பெற்ற உணர்வு நிலைக்குத் திரும்புகிறது. இந்த உணர்வு நிலையின் உச்சகட்டம் ஒன்றிலும், ஏழிலும் (468, 474 நிலைபெற, இறங்குமுகத்தின் எல்லை ஆறாம் (473 பாடலில் வெளிப்படுகிறது. இவ்வாறு அவருடைய உள்ளத்தில் 'நீ என் செய்தாய்' என்று கேட்கும் அளவிற்குக் கீழே இறங்கிய பிறகுதானே அடியார் கூட்ட தரிசனம் கிடைக்கின்றது. அதனையே அடிகளார் ஒருசில விநாடிகள் என்னைக் கயக்க வைத்து' (473ஆறாவது பாடல் நிலைக்குத் தள்ளி) மறுபடியும் அடியார் தரிசனத்தைக் காணும் உச்சகட்டத்திற்கு ஏற்றினாய் என்கிறார். - இறையனுபவம்கூட ஏறி, இறங்கும் இயல்புடையது என்று தொடர்ந்து நாம் கூறிவரும் கருத்திற்குத் திருக்கழுக்குன்றப் பதிகம் சிறந்த எடுத்துக்காட்டாகும். கண்ட பத்து தேவாரம் பாடிய மூவரும், அடிகளாரும் தில்லைக் கூத்தனின் நிருத்தத்தைக் கண்டு பல பாடல்கள் பாடி யுள்ளனர். அவர்களுள் காலத்தால் மிக முற்பட்டவராகிய நாவரசரும், நால்வரில் காலத்தால் பிறபட்டவராகிய அடிகளாரும் தில்லையில் பல்வேறு விதமான அனுபவங் களைப் பெற்றுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. அவர்கள் பெற்ற அனுபவங்களில் சிலவற்றிற்கு வடிவு கொடுத்து இந்த இரண்டு பெருமக்களும் பாடியுள்ளனர். - 'என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன் திருக்குறிப்பே (திருமுறை:4812) அத்தா நின் ஆடல்