பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 385 காண்டான் அடியனேன் வந்தவாறே இருமுறை, 423, என்றும், என்றும் நால்வரில் மூத்தவராகிய நாவரசர்பெருமான் பாடியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது. கூத்தனின் அபய கரத்தைக் கண்டு என்று வந்தாய்' என்று கேட்டதுபோல அமைந்துள்ளது என்று பாடிய நாவரசர், அதற்கு விடை கூறுவதுபோல நின் ஆடல்காண்டான் அடியனேன் வந்தவாறே என்று பாடுகின்றார். மூவர் முதலிகள் வரலாற்றில் இவர்கள் யாரையும் தில்லைக்கு வருக என்று இறைவன் கட்டளையிட்டதாக எந்தச் செய்தியும் இல்லை. மூவர் வரலாற்றைக் கூறும் பெரியபுராணம்போல, அடிகளார் வரலாற்றைக் கறும் நூல் இல்லையென்பது உண்மைதான். திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் தம்மை விட்டுவிட்டு மறைவதற்கு முன்னர்க் குருநாதர் தில்லைக்கு வருக என்பதைக் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித்து அருளி' திருவாச2-128-129 என்று அடிகளாரே பாடுகின்றார். ஆதலின், குருநாதரின் ஆணையைச் சிரமேற்கொண்டே அடிகளார் தில்லை வந்தார் என்று நினையவேண்டியுள்ளது. திருஉத்தரகோசமங்கை, திருவண்ணாமலை, திருக்கழுக் குன்றம் ஆகிய எத்தனையோ தவங்களுக்குச் சென்று தரிசித்ததுபோலத் தில்லைக்கும் வந்திருக்கலாம் அல்லவா என்று ஐயுறுவார்க்கு விடைகூறுவதுபோல, குருநாதரின் கட்டளை இது என்று அடிகளார் விடை கூறுகின்றார். அப்படியானால் தில்லைக்கு வரும்போதே அடிகளார் மனத்தில் பலப்பல எதிர்பார்ப்புக்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அந்த எதிர்பார்ப்புகளை இனிக் காணலாம். மறைந்துபோன குருநாதரையும் அடியார் கூட்டத்தையும் தில்லையில் காண முடியும் என்று எதிர்பார்த்திருக்கலாம்.