பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 423 உடல் புகுந்தான், உளம் நிறைந்தான், உயிர் கலந்தான் என்று முன்னரே பாடிவிட்டமையின், இப்பொழுது அப்படிக் கலந்த நிலையிலிருந்து பிரிந்து, புறத்தே நின்று, அந்தக் கலந்த காட்சியைக் காண்கிறார் அடிகளார். அதன் பயனாகவே உடல்முழுதும், உயிர்முழுதும் அவன் கலந்துள்ளான் என்றாலும், உடலின் அடையாளமாக ஓர் உறுப்பையும், உளத்தின் அடையாளமாக ஒர் உறுப்பையும் தனியே எடுத்து விதந்து பேசுகிறார். உடல் முழுதும் நிறைந்தவன் உடலின் தனிச்சிறப்புப் பெற்ற கண்ணின் வழியாகக் காட்சியளிக்கிறான். ஆழமாகவுள்ள உள்ளத்தில் நிறைந்தவன், மேலாகவுள்ள மனத்தின் வழியாகவும் காட்சி தருகிறான். நுண்மையான உளத்தின் பிரதிநிதியாக மனமும், பருமனனான உடலின் பிரதிநிதியாகக் கண்ணும் பேசப் பெற்றிருத்தல் அனுபவத்தின் தனிச்சிறப்பைக் காட்டுவன வாகும். 'மறுமாற்றத்திடையான்' என்பதற்குப் பல்வேறு விதமாகப் பொருள் கூறியுள்ளனர். மறுமாற்றம் என்ற சொல் ஒரு வினாவிற்குரிய விடையைக் குறிப்பதாகும். விடையாக வரும் சொல்லிலும் உள்ளான் என்று விளக்கம் தந்தால் அது பொருந்துமாறில்லை என நினைந்த உரையாசிரியர் பலரும் 'மறுமாற்றம்’ என்ற சொல்லிலுள்ள 'மறு’ என்ற பகுதியை எடுத்து, அது மற்று' என்ற சொல்லின் இடைக்குறை என்று பொருள்கூறினர். அது. ஒருபுறமிருக்க, 'மறுமாற்றம்’ என்ற தொடரை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். மாற்றம் என்பது ஒருவர் சிந்தனையில் தோன்றிய எண்ணம் சொல்வடிவு பெற்று வெளிவருவதைக் குறிக்கும். மறுமாற்றம் என்பது இவ்வாறில்லை. எதிரே உள்ளவர் நம்மைநோக்கி ஒரு வினாவை எழுப்பினால், அந்த வினா விற்குரிய விடைதான் சொல்வடிவாக வெளிவருகிறதே தவிர, நம்முடைய சொந்த எண்ணங்களுக்குக் கொடுக்கப் பட்ட வடிவு அல்ல அது.