பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 449 இவற்றை மனத்துட் கொண்டு பார்த்தால் சார்ந்தவர் என்று அடிகளார் கூறியதன் உண்மைப்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். இறைநேசர்கள், இறை அன்பர்கன் ஆகியோர் அறிவின் துணையை நாடுவதில்லை. அவர்கள் அடிச்சித்ததில் நிலைபெற்றுத் தங்கியுள்ள இறை நம்பிக்கை ஒன்றே அவர்கட்குப் போதுமானது. அந்த நம்பிக்கை வலுப்பட வலுப்பட, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சதிர் இழந்து அறிமால் கொள்கின்றனர். அவர்களைப் பிடித்திருப்பது கடவுட்பித்தேயாகும். இதனை அறியாத உலகத்தார் அவர்களைச் சதிர் இழந்தவர்கள்’ என்றும், அறி மால் கொண்டவர்கள் என்றும் பேசுகிறார்கள். அடிகளானரப் பித்தன்' என்று டேசிய உலகமும், 'திண்ணன் கோட்பட்டான்' என்று பேசிய நாணனும் காடனும் மேலே கூறியவற்றிற்குச் சான்றாவர். இந்த வலுவான நம்பிக்கையைப் பெறாதவர்கள் வேரில்லாத மரம்போல் ஆகின்றனர். அடிச்சித்தத்தில் நம்பிக்கை இல்லாத காரணத்தால் மனத்தில் உலக இன்பங்கள் திரள்திரளாக வந்துபோகின்றன. கானல் நீர்போல வந்துபோகின்ற இந்த இன்பங்கள் அல்லது காட்சிகள் அவர்களை ஆட்டிப்படைக்கின்றன. அந்தந்த விநாடியில் கிடைக்கும் இன்பத்தையே பெரிதென மதித்து வாழ்கின்றவர்களே உலகில் மிகப் பெரும்பாலானவர்கள். அவர்களைப் பார்த்தே நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்(528) என்றும், செறியும் பிறவிக்கு நல்லவர் 329) என்றும் அடிகளார். பேசுகிறார். இத்தகையவர்களைப் பார்த்து, பாண்டிப்பிரானை எதிர்கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கிறார். ஆனந்தமாகிய குதிரையில் ஏறி, ஞான வாளுடன் வருகின்ற அவன், தன்னை நோக்கி வந்தவர்களின் பிறப்பை அறுத்து விடுகிறான் ஆதலின், பிறப்பு மகிழ்ச்சியானது என்று