பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கருதுபவர்களை, அவனை எதிர்கொள்ளாதீர்கள் என்று 'செல்லல் மின்’ (529) என்ற சொல்மூலம் எச்சரிக்கிறார். அடிகளார் அமைச்சராகப் பணிபுரிந்தவர் ஆதலின் போர்முனையிலுள்ள சில நுணுக்கங்களை 529ஆம் பாடலில் தெரிவிக்கின்றார். மாபெரும் வீரன் ஒருவன் பகைவர் நாட்டில் புகுந்துவிட்டால் எதிர்த்துவருபவர்கள் அனைவரையும் தாரதம்மியம் பாராது கொன்று குவிப்பான். சாவுக்குப் பயந்தவர்கள் மேற்கொள்வது ஒரே வழிதான். அதாவது பகைநாட்டு வீரன் தம் எல்லையைக் கடந்து செல்கின்றவரையில் வெளிப்பட்டு அவனை எதிர் கொள்ளாது இருப்பதுதான் அவ்வழி. இந்தக் காட்சியை பல இடங்களில் அடிகளார் கண்டிருக்க வேண்டும். ஆகவே, இதனை மிக அற்புதமாகக் கையாள்கிறார். 'தென்னன் நல்நாட்டு இறைவன் கிளர்கின்ற காலம் இக்காலம்’ என்ற தொடர் அந்த மாவீரன் புறப்பட்டு விட்டான், எந்த விநாடியும் உங்களுக்கு எதிரே வரக்கூடும். எனவே, இந்தப் பிறவியில் பெரும்பற்று வைத்து இன்னும் வாழவேண்டும் என்று நினைக்கின்றவர்களாகிய நீங்கள் அவனெதிரே செல்லாதீர்கள். மீறிச் சென்றால்- ஆனந்தம் என்ற குதிரையின்மேல் ஏறிவரும் அந்த வீரன், தன் கையில் உறைகழித்த ஞானம் என்ற வாளைத் தாங்கி வருகிறான். ஆதலால்- உங்கள் பிறப்பை அறுத்துவிடுவான் ஆகவே, இந்தப் பிறவியில் இன்னும் தொடரவேண்டும் என்று நினைக்கின்றவர்கள் அவன் எதிரே செல்லல்மின்’ என்கிறார். பழங்காலக் கதைகளில் ஒரு சிறப்பான பகுதியைக் காணமுடியும். ஒரு மன்னன் மாபெரும் வெற்றியைப் பெற்றாலோ நீண்டகாலம் மகப்பேறு இல்லாதிருந்து அரசுக்குரிய வாரீசாக ஒரு ஆண் மகவைப் பெற்றாலோ