பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பத்து 61 நம்பிக்கையின்மைக்குப் பிறகு, இந்தப் புதிய நம்பிக்கை துளிர்க்கும் 'அதிசயப் பத்து வைக்கப்பட்டது முற்றிலும் சரியே என்று தோன்றுகிறது. இந்த வளர்ச்சி முறையைச் சிந்திக்காத யாரோ ஒருவர் முத்தி இலக்கணம்' என்று இதற்கு உட்தலைப்புத் தந்துள்ளார். மேலே கூறிய அடிப்படையில் பார்த்தால், இந்த உட்தலைப்பு எவ்விதத்திலும் பொருந்துமாறில்லை. வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு நிலை தமக்குக் கிடைத்ததை நினைந்து இப்படியும் நடக்குமா என்ற வினாவை எழுப்பிக்கொண்டு, இது ஒர் அதிசயம்’ என்ற முடிவிற்கு வருகிறார் அடிகளார். இப்படிப்பட்டதோர் அதிசயத்தை யாரேனும் கண்டதுண்டோ என்ற முறையில் பாடல்கள் முடிகின்றன. சென்ற மூன்று பத்துக்களில் தளர்ந்த நம்பிக்கை இப்பத்தில் மீண்டும் துளிர்க்கிறது என்று கூறியுள்ளோம். திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் குருதரிசனம் கிடைத்தது. குருநாதர் மறைந்து உமையொரு பாகனாய் மாறியதைக் காணமுடிந்தது; அதுவும் மறைந்து தில்லைக் கூத்தனைக் காணமுடிந்தது. இக்காட்சிகள் கிடைப்பதற்கு முன்னரே, திருவடி சம்பந்தம் கிடைத்தது. அந்நிலையில் இறையனுபவம் என்ற ஆழியுள் அமிழ்த்தப்பெற்றார். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, அடியார் கூட்டத்திடையே தம்மை இருக்குமாறு செய்தது அடிகளார் மனத்தில் பெரியதோர் இடத்தைப் பிடித்துவிட்டது என்று தெரிகிறது. குருதரிசனம் கிடைத்த அதிசயம் கண்டாமே என்றோ, அமுத தாரைகள் ஏற்றப்பெற்ற அதிசயம் கண்டாமே என்றோ, பரா அமுது ஆக்க வழிசெய்த அதிசயம் கண்டாமே என்றோ பாடாமல், ஒன்பது பாடல்களிலும் 'ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே”