பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயப் பத்து 63 அறத்தொடு கூடிய ஒழுக்க நெறியில் நின்றதில்லை; அப்படி நிற்பவரோடு சேர்ந்து வாழ்ந்ததும் இல்லை. துன்பத்தையே துணையாகக் கொண்டு மாறிமாறிப் பிறந்து உழல்கின்ற என்னை அவன் ஆண்டு, அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே என்றபடி, 430. முன்னை என்னுடை வல் வினை போயிட முக்கண் அது உடை எந்தை தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்கு பொன்னை வென்றது ஓர் புரி சடை முடிதனில் இள மதி அது வைத்த அன்னை ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே 3 தேவர்கள் முதலிய யாவரும் அறியமுடியாதவனாகிய எந்தை அடியவர்க்கு எளியனாய் இருப்பது ஒர் அதிசயம். - பழவினையை அனுபவித்துத்தான் தீரவேண்டுமே தவிரப் போக்கிட முடியாது என்பர் உலகோர். இதற்கு மாறாக என்னுடைய முந்தைய வல்வினை ஒரே விநாடியில் போகுமாறு அருள்செய்து அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே என்றவாறு, - வல்வினை போயிட என்ன செய்தான்? தனது மூன்றாவது கண்ணால் என் வினையை எரித்தான் என்ற குறிப்புப்பொருள் தோன்ற முக்கண்அது உடை எந்தை' என்றார். மாபெரும் தவறுகள் செய்தவனாயினும் தன்னை வந்து அண்டிய சந்திரனைத் தலைமேல் வைத்துக் கொண்டான் ஆதலின், அச்செயல் தாயின் செயலாம் என்பதைக் காட்ட இளமதி அது வைத்த அன்னை என்றார். -