பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 431. பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஒர் காரணம் இது கேளிர் ஒத்துச் சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை அத்தன் ஆண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே 4 மெய்யடியார்கள் செல்லும் வழியை ஏற்றுக்கொண்டு, அதே வழியில் சென்று, ஒத்துச் சென்று) அவன் திருவருளை அடைவதே முறையாகும். இதனை அறிந்திருந்தும் அவ்வழிச் செல்லாமல் நேரெதிரான வழியில் சென்று நரகத்தில் வீழ விரைந்து கொண்டிருந்தேன். அப்படிச் செல்லும் என்னைத் தடுத்தி நிறுத்தி, ஆட்கொண்டு அடியரில் கூட்டினான். 'திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்டு இப் புதுவழியில் குருநாதர் என்னைச் செலுத்துவதற்கு முன்னர் உலகிலுள்ள ஏனையோர் செல்லும் வழியிலேயே நானும் சென்றுகொண்டிருந்தேன். அதாவது, கல்வி, கேள்வி, பதவி, ஆடம்பரம் என்ற வழியில்தான் நானும் சென்றுகொண்டிருந்தேன். அப்பொழுது இந்த உலகத்தார் என்னை ஒன்றும் குறை சொல்லவில்லை. சொல்லாதது மட்டுமன்று; சிறந்த மதியூகி, சிறந்த அமைச்சன், சிறந்த கல்விமான் என்று என்னைப் புகழ்ந்தனர். அவ்வழியிலேயே நான் சென்றிருந்தால் இவர்கள் புகழ் உரை மட்டுமே மிஞ்சியிருக்கும்; கடுநரகு என்னை எதிர்கொண்டிருக்கும். அத்தன் ஆண்டுகொண்டமையால், மேலே கூறிய அனைத்தையும் துறந்து, இறைவனைப் பற்றிய ஒரே சிந்தனையில் திரிந்த என்னைக் கண்டு இவ்வுலகோர் பித்தன் என்று பேசினர்.