பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 திருவாசக ஒளி நெறி "விண்ணகத்தில் ஒன்றாய், மிக்கு வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச், செந்தீத் தன்னுருவின் மூன்றாய்த், தாழ் புனலின் நான்காய்த், தரணிதலத் தஞ்சாகி"-அப்பர் 6-54-5 'மண்குண மஞ்சு, கால்முக நகர முன்கலை கங்கை நால்குண, மகர முன்சிக ரங்கி மூணிடை-தங்குகோண மதன முன்தரி சண்ட மாருதம், இருகுணம் பெறில் அஞ்செலோர்தெரு, வகர மிஞ்சிய கன்படாகமொ _ ரொன்றுசேரும்.' திருப்புகழ் 652

4.164 'தென்னாடுடைய சிவன்'

(36-4 பார்க்க)

4.165 "எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

'நாடுடைய நாதன்' -சுந்தரர் 7-90-9

4.200 "பேராயிர முடைப் பெம்மான்"

"பேராயிரம் பரவி வாளுேள் ஏத்தும் பெம்மானே" - அப்பர் 6-54-8

4.218 "பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்"

"பிழைப்பு வாய்ப்பொன்றறியேன்"-கயிலைபாதி காளத்திபாதி அக்தாதி 98

5.2 "உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது"

'உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்'-திருமுரு : தனிப்பாடல் 5

'சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம் சிவபெருமான்திருவடியே சேரப் பெற்ருேம்' -அப்பர் 6-98-5

'உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன்' அப்பர் 6-81-7

'ஏழை பாகனை அல்லால் இறையெனக் கருதுதல் இலமே' சுந்தரர் 7-76-9

(திருவாசகம்) 4-74

5.4 "அவிதா இடும் நம்மவர்"

'வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா என' திருப்புகழ் 1140

5.5 'நின் திருவடிக்காம் பவமே யருளு கண்டாய் அடியேற்கு'

"பிறப்புண்டிேல் உன்னை யென்றும் மறவாமை வேண்டும்" பெரியபுராணம்-காரைக்கால் (69)

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரல் வேண்டும்" - அப்பர் 4-94-8