பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசுசு திருவாசக ஒளிநெ றி பத்திலும், 'உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலம்' என்று திருவெம்பாவையிலும், இலங்கை அதனில் பங்தனே மெல்விரலாட்(கு) அருளும் பரிசு 48-5 என்ற இடத்தும், ' பித்தவடிவுகொண்டு இல் வுலகில் பிள்ளையுமாம்... உத்தரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்தவர்' (13-19) என்று திருப்பூவல்லியிலும் காணக் கிடக்கின்றது. (கதிரை மலைப்பள்ளு பக்கம் 82-85) "இலங்கை சென்று புக்கனன்...வண்டலம்பு மன்றல் சில்லோதியை மணந்தவன் வதிந்தான்'-(7) "ஆயவேலையின் அரக்கர் கோன்...வங்தனன். அதுகாணுத் தாயன்ை பசுங்குழவியாயினன் தசமுகன் முன்'-(8) 'கண்ணும் நெஞ்சமும் கவர் வனப்புடைய பாலனேக் கண்(டு) உண்ணெகிழ்ந்தனன், மைந்தன் யார் என, உயிர்த்துனேவி தண்ணறுங்குழல் தாபத மடங்தை தங்து அகன் ருள்... அரும்பெறற் புதல்வனே என்ருள்' (உத்தரகோச மங்கைப் புராணம்-பக்கம் 44; 8-பார்ப்பதி தவ புரிந்த அத்தியாயம் 7, 8 காறு பெருமான் தாயான வரலாறு (8) தாயான தத்துவனை'-8-7. சுவாமியிடத்தில் அன்பு மிகுந்திருந்த ஒரு மாது, !: யிருந்து, பிரசவகாலத்திற் காவிரி பெருகினதால், தன் தாய் வங்: உதவப் பெருமற் சங்கடப்படும் பொழுது, சுவாமியே அவள் தாயை போல வங்து மருத்துவம் பார்த்து ஆதரித்த அருமையான தல திரிசிராப்பள்ளி. இதல்ை சுவாமிக்குத் 'தாயும் ஆனவர்' என்னு பெயர் வந்தது; தாயான தத்துவன் ஆனர். 9) இந்திரனைத் தோள் நெரித்து'-8-15. முன்பு ஒருகாலத்தில் இந்திரன் சிவபிரானே மதியாமல் திருமாலைத் தக்லவராக வைத்துக்கொண்டு ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தான். : பிரான் இதை அறிந்து யாகசாலைக்கு வந்து "அடே ! நீ என்னே. இன்றி யாகம் செய்ய வல்லவன?' என்று அதட்ட இந்திரன் அவருடன் போர் செய்ய, அவர் வாட்படையினல் அவனுடைய தோள்களை வெட் எறிந்தார். இவ்வரலாற்றை 'சிவபராக்கிரமம், இந்திர யாக பங்க பராக்கிரமம்' என்னும் தலைப்பிற் காணலாம். அதில் கீழ்க்காட்டிய இரண்டு பாக்கள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள.