பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி - ச் திருவாசக ஒளிநெறி பண்ணில், என்ன இராகத்தில் அவ்வத் திருவாசகப் பதிகங்களைப் பாடலாம் என்பதையும் கீழ்க் காட்டுவாம். 1. சிவபுராணமும் (கலிவெண்பா) ஏனேய வெண்பாக்களும் (பதிக எண்கள்: 19, திருத்தசாங்கம், 47 திருவெண்பா; 48 பண்டாயநான்மறை) வெண்பாவுக்குரி தென்று ஆன்ருேர் சொல்லுகின்ற சங்கராபரண ராகத்தில் (பண் பழம்பஞ்சுரத்தில்) பாடுக ற்கு உரியனவாம். 2. கீர்த்தித் திரு அகவல் 3. திருஅண்டப்பகுதி 4. போற்றித் திரு அகவல் இவை மூன்றையும் சம்பந்தர் தேவாரத்தில் ஆசிரியப்பாப் போல அமைந்துள்ள திருவெழுகூற்றிருக்கைக்கு (ஒருருவாயினே 1-128) உரிய பண் வியாழக்குறிஞ்சியில் (இராகம், செளராஷ்டிரத்தில்) பாடலாம்; பின்னும், முதல் திருமுறையில் ஆசிரியப்பாப்போல அமைந்துள்ள பதிகங்கள் 75 முதல் 79 முடிய (காலே நன்மாமலர்...முதலிய) பண் குறிஞ்சியில் (இராகம் - குறிஞ்சி, சுருட்டி, ஆரபி இவைகள் ஏதேனும் ஒன்றில்) பாடலாம். 5. திருச்சதகம் (1) மெய்தான் அரும்பி'-இது கட்டளைக் கலித்துறை. இதைச் சம்பந்தர் தேவாரத்தில் 'காட தணிகலம்' (1-117) எனத் துவக்கும் பதிகத்திற்குரிய பண் வியாழக்குறிஞ்சி இராகம் செளராஷ்டிரத்தி லாவது, அப்பர் தேவாரத்திலுள்ள திருவிருத்தங்கள் 'பாளையுடை' முதலிய (80 to 118) பதிகங்களுக்கு உரிய பைரவி இராகத்தி லாவது LJMTL_ól)ITLD (2) நாடகத்தால்-இது கொச்சகக் கலிப்பா. இது சம்பந்தர் தேவாரத்தில் காளாய போகாமே. 1.62 என்னும் பதிகத்திற்குரிய பண் பழங்தக்கராகத்தில் (அரபியிலாவது) "கள்ளார்ந்த பூங் கொன்றை' 11-48 என்னும் பதிகத்திற்குரிய பண் சீகாமரத்திலாவது (இராகம் . நாதநாமக்கிரியையிலாவது, 'பைங்கோட்டு மலர்ப் புன்னே' 1II-68 என்னும் பதிகத்திற்குரிய பண், பஞ்சமத்திலாவது (இராகம் - ஆகிரி):பாடலாம். .