பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. (1) பாடினுேர் பகுதி பாடினுேர் வரலாறும் அவரவர் தம்மைப் பற்றி நூல் அகத்துள் கூறியவையும் திருஇசைப்பா பாடினவர் ஒன்பதின்மர். அவர் தம்முள். 1. திருமாளிகைத் தேவர் வரலாறு: இவர் சைவ சமயத்தை நன்கு வளர்த்துப் போற்றினவர்* பல வகைய சித்திகளைப் பெற்றவர். சைவசித்தாந்த நூல்களை ஆய்ந்து உணர்ந்த பெரியார். திருஆவடுதுறை ஆதீன மடாலயத்தள் இவருக்குத் தனிக்கோயில் இருக் கின்றது. இவர் தில்லைக் கூத்தப் பெருமானே வழி பட்டுப் பாடியனவாக திரு இசைப்பாப் பதிகங்கள் நான்கு உள்ளன. இவர் சிவனைப் போற்ரு தவரையும் திருநீற்றைப் போற்ரு தவரையும் வாயார வைகின்ருர். இவரைப் பற்றிய வேறு பல விவரங்களை திருப் பனந்தாள் திரு இசைப்பாப் பதிப்பிற் (1964) காண லாகும். இவர் தம்மைப்பற்றி நூலகத்திற் கூறியவையும் வேண்டுகோள்களும் பதிகம் 1. கோயில் இப்பதிகத்தில் அம்பலத்து அரசை விளித்துத் தாம் செய்யும் வேண்டுகோள்களைப் பின் வருமாறு தெரிவிக்கின் ருர், ஒளிவளர் விளக்கே அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே. அம்பலக் கூத்தா அயனெடு மாலறியாமைப் படரொளி, பரப்பிப் பரந்து நின்ரு யைத் தொண்டனேன் பணியுமா பணியே.

  • இப்பகுதியின் அநுபந்தம் பார்க்க. :

1 I. F 2