பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அர்.() ச. (2) திருவிசைப்பாப்பாடிய..குறிப்பு (திருஇசைப்பன் 3. கருவூர்த் தேவர் (பதிகம் 8-17) இவர் பாடிய பதிகங்கள் எல்லாம் மிகப் பத்திரசம் வாய்ந்தவை. இவர் பாடிய பத்துப் பதிகங்களுள் ஒன்று தில்லைக்கும் ஏனைய ஒன்பது பிற தலங்களுக்கும் ஆம். இவர் வேதம் பயின்றவர் என்பதும்; அங்ங்ணம் பயின்ற வாயால் தமிழ் மாலையும் பாடி உள்ளார் என்பதும், "ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை' என வரும் அவர் திருவாக்காலே தெரிகின்றன. மேலும் தம்மை 'ஆாணம் பிதற்றும் பித்தனேன்' 'செழுமறை தெரியுந் திகழ்கருவூர னேன்' எனக் கூறும் அவர் "ஆலையம் பாகின் அனைய சொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை' எனத் தாம் பாடிய தமிழ்ப்பாவைப் பற்றிக் கூறியுள்ளது கவனிக்க ற் பாலது. 4. பூந்துருத்தி நம்பி காட நம்பி பதிகம் 18-19 இவர் பாடிய இரண்டு பாடல்களுள் ஒன்று தில்லைக்கும், பிறிதொன்று திருவாரூருக்கும் உரியன. தில்லைக்குப் பாடிய பண் தேவாரத்தில் இல்லாத 'சாளரபாணி' என்னும் பண். இவர்தாம் அப்பர்; சம்பந்தர்; சுந்தார் கண்ணப்பர் கணம் புல்லர் சேரமான் என்னும் நாயன்மார்களைப் பற்றிக் கூறியுள்ளார். பின்னும் சேரமானும், சுந்தரரும் "க்ளையா உடலோடு கயிலைக்குச் சென்றதும் சுந்தரர்' வெள்ளானைமேல் சென்றதும் கூறியுள்ளார். 5. கண்டராதித்தர் (பதிகம் 20) இவர் பாடிய ஒரே பதிகத்தில் 'என்று தில்லைப் பெருமாகனக் கூடுவேன்' என்று ஒவ்வொரு பாடலிலும் தமது ஆராமையைத் தெரிவித்துள்ளார். இவர் அரச வமிசத் தைச் சேர்ந்தவர். இப்பதிகம் சுந்தரர் தேவாரத்தின் 83, 84 எண்ணுள்ள பதிகங்களைப் பின்பற்றுவது.