பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

நல்வினை செய்து வாழவேண்டும் என்று நினைக்க மாட்டேன்.

அவ்வாறு நினைத்து வாழ்நாளில் ஒரு நாளேனும் வீழ்தாள்(வீண் நாள்) ஆகாமல் நல்வினை செய்கின்ற உண்மைத் தொண்டர்க்குத் தொண் டர்க்குத் தொண்டன் என்று எண்ணாமல் எனக்கென இறைவன் வகுத்த காலத்தை அவலமாக அழித்துப் புறம்பசுவர் கோலம் செய்து பிறர்க்கு என்னை நல்லவன்போலக் காட்டுவேன்.

கள்ளமும் கயவரின் உணர்வும் காமமும் பொருளுமே உறுதிப் பொருள் எனக் கருதித் திரிபவர் கூட்டத்தில் ஒருவனாகிப் போனேன். அத்தகைய இழிஞனாகிய அடியேனையும் கருணையால் காத்து அடிமை கொண்ட பெண் அரசியே! கைகளைக் கொட்டி அருள்க!

சங்கத் தமிழ்ப் பாடல் பாடித் தரும் கோதையே ஆண்டாளே! கைகளைக் கொட்டி அருள்க! -

கவடுபடு நெட்டிலைச் சூலமும் பாசமும் கைக்கொண்ட காலன்வா யில்

கணக்கர்உண்டு அவன்ஏவ வில்பினக் கரும்.உண்டு

கடிதின்அவர் கைப்பற்று நாள்

சிவனும்நான் முகனும்உய சாரஉரை செப்பினும்

சிறுவரையும் ஒருவ்ரை விடார்

திண்னம்என்று உட்கொள்வது அன்றியே நரகுசெய்து

தீமைசெய் பவர்கள்என் றே

அவமதிப் பவைஒன்றும் இன்றியே தீவினைக்கு

அஞ்சியே அருள்புரிவ தும்

அவன்அருளில் ஆயதுஎன்று ஊதியம் எனும் செம்மை

அந்தாமம் எய்துதற் காம்

தவமதித் தவர்துதித் தருள்புதுவை அபிராமை!

சப்பாணி கொட்டிஅரு ளே! சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும்கோதை!

சப்பாணி கொட்டிஅரு ளே! (55)