பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் x 109

பிளவுபட்ட நெடிய இலைவடிவமான துணிகளையுடைய குலமும் உயிர்களைப் பிணிக்கும் சாபாசக்கயிறும் கையில் கொண்ட காலனது வாயிலில் கணக்கர் உண்டு. அவன் ஏவியபடி செய்யும் பிணக்கரும் உண்டு.

விரைந்த அந்தக் கால தூதர்கள் உயிரைக் கைப்பற்றுங் காலத்து சிவனும் நான்முகனும் வந்து காலனுக்கு முகமன் உரை சொன்னாலும் சிறுபொழுது(ஒருநொடி கூட யாரையும் விடமாட்டார்கள். இது உறுதி என்று ஏற்றுக் கொள்வது அன்றியே, அளறி(நரகில் எய்துவிக்கும் தீமை செய்பவர்கள் என்று மானக்கேடு ஏதும் இன்றி தீவினை செய்வதற்கு அஞ்ச வேண்டும்.

தீவினை செய்யாமல் இருக்க அருள்புரிவதுவும் இறைவன் அரு ளால் தான்் ஆவது என்று எண்ணுதல் வேண்டும்.

உயிர்கள் அடைய வேண்டிய ஊதியமாகிய பெருமை(செல்வம்) வீடுபேறு பரமபதம்) ஆகும். அதனை அடைவதற்கான் நல்வழி தவமே, அத்தவத்தை மதித்துச் செய்தவர்கள் போற்றி அருளும் புதுவை அழகி(அபி ராமை)யே ஆண்டாளே! கைகளைக் கொட்டி அருள்!

சங்கத் தமிழ்ப் பாடல் பாடித்தரும்கோதையே! கைகளைக் கொட்டி அருள்!

வாதித் தெழுபர வாதிகள் எனும்மத

யானைகள் மதம்எல்லாம்

வற்றிப் புறம்இட இடிஏறு எனும்உரை

வளர்கே சரிஎன்ன

ஆதிப் பிரமம் திருமறு மார்பனது

அந்தா மத்துஉளதாய்

அகில உயிர்க்குஉயிர் ஆகியது அரிஎன

ஆதியும் அந்தமும்நூல்

ஓதித் தருபொருள் உரையது முற்குணம்

உற்றது கற்றதுஎலாம்

உத்தம முத்தி அளிப்பது கருணையின்

ஓங்கியது எனும்உரையே