உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. முத்தப் பருவம்

அத்தம தக்கரி கத்திஉ ரைக்குமுன்

ஆத்தடம் உற்றுஇடர்தீர் # *

அத்தர்பொ ருப்புஅழ கர்க்குஒரு முத்தம்அ

இறுககு அக லததகலா

உத்தமி யைப்பணி வெற்பில்உ தித்தஒ

ளிக்குஒரு முத்தமொடே

ஒத்துஇரு பக்கம்இ ருப்பவர் மெச்சிட

உற்றிரு முத்தமும்நீர்

தத்து திரைத்திரள் முத்தம்அ லைத்தெறி

தட்பந திக்கிடையே

சர்ப்பந டுச்சர தத்துடன் நித்திரை

தத்துவ நித்திரையாய்

முத்திஅ. ளித்தருள் முக்தர்த மக்கொரு

முத்தம்ஆ வித்தருளே முத்தமிழ் கற்றபு சுழ்ப்புது வைக்கிளி

முத்தம்.அ வித்தருளே! (58)

துதிக்கையும் மதமும் கொண்ட வாரணன் (கசேந்திரன்) ஆதிமூ லமே! என்று ஒலமிடுமுன், அந்த யானையினை முதலை கவ்விய அந்த நீர்நிலையை அடைந்து அதன் துயர் தீர்த்த தலைவர் சோலை மலை அழ கர்க்கு ஒரு முத்தமும்,

மார்பின் அருகிலிருந்து அகவாத மாண்புடையவளாகிய படமு டைய சேட மலையில் உதித்த பதுமாசனியாகிய ஒளிக்கு ஒரு முத்தமும்,

பொருத்தமுடன் இறைவனுக்கு இருபுறமும் வீற்றிருக்கும் மலர்மக ளும் மண் மகளும் மெச்சுமாறு உற்று இரு முத்தங்களும் தாவுகின்ற அலைக் கூட்டம் முத்தங்களை அலைத்து வீசுகின்ற தண்ணிய காவிரி ஆற் றின் நடுவிலே ஆதிசேடனாகிய பள்ளியின் நடுவே நிலையாகக் கொண்ட அறிதுயில் நித்திரை தத்துவம்) காட்டி வீடுபேறு அளித்தருள்கின்ற முத் தராகிய தென்னரங்கர்க்கு ஒரு முத்தமும் அளித்தருள்!

முத்தமிழ் கற்ற புகழையுடைய புதுவை வாழ் கிளியே! ஆண்டாளே! முத்தம் அளித்தருள்!