பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த கோவேந்தன் k 113

மறைமொழி வானவர் பொன்.உலகு ஆள்பவர்

வாழ்வு தழைத்திட மால்

வாமன ரூபம தாய்நிமிர் தாளினில் வரநதி என்பது உறீஇக்

கறைகெழு பரசு தரித்தவர் சடைபுனை

கங்கைக்கு ஒருமுத்தம்

காரித ரும்குரு பரன்நதி ஆகயு கன்னிக்கு ஒரு முத்தம்

பொறைபயில் சங்குஅணி துறைவளம் மல்கிய

பொருநைக்கு ஒருமுத்தம்

பொறி.அரவு அணையினர் தாமம் எனப்புனை

பொன்னிக்கு ஒருமுத்தம்

முறைமுறை இலவுஇதழ் புரைகுறு நகைபயில்

முத்தம்அ ரித்தருளே

முத்தமிழ் கற்றபு கழ்ப்புது வைக்கிளி

முத்தம்.அ எரித்தருளே! (59)

மறை மொழிகின்ற வானவரும் பொன்னுலகாள்பவரும் தங்கள் வாழ்வு தழைப்பதற்காக, திருமால் குறள் (வாமன வடிவாக வந்து உலக ளப்பதற்காக திரிவிக்கிரமனாக நிமிர்ந்த போது திருவடிகளில் கங்கை ஆறு என்பதாகத் தழுவி, ஊன்கறை மிக்க சூலம் தரித்த சிவன் சடையில் புனைந்த கங்கைக்கு ஒரு முத்தமும்,

காரியார் பெற்ற மகனும் ஆசாரியர்களின் தலைவருமாகிய நம்மாழ் வார்க்கு உரிமையான குமரி ஆற்றுக்கு ஒரு முத்தமும், பாரம் பொருந் திய சங்கணி துறைவளம் மல்கிய பொருநை ஆற்றுக்கு ஒரு முத்தமும்,

புள்ளியுடைய நாகணையினர் மாலைபோவப் புனைந்த பொன்னி

(ஆற்றுக்கு ஒரு முத்தமும் என வரிசையாக செம்முருக்கம் பூப்போன்று சிவந்த இதழ்களில் குறுநகை பயிலும் முத்தம் அளித்தருள்!