பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

என் மனம் விட்டு நீங்காத மாதவன் பவளவாய் தித்தித்து இருப்ப துடன் கருப்பூர மணம் வீசுமோ? என்று உரைத்தருளினாய்! அவ்வாறு உரைத்த உன் கனிவாயின் முத்தம் அருள் கலவையான மான்மதம் கேத்துரி) புனைந்த மொட்டுப் போன்ற முலையில் அணிந்த கோதையே! கனவாயின் முத்தம் அருள்!

ஆலந் தளிருள் கிடந்துஅகிலம்

அகத்துஇட்டு உதரக் கனல் கனற்றாது

ஆழித் தடக்கை கிழக்குறவைத்

தவற்கும் செரியாது என ஆடை

மேலில் தரித்தே ஒரு செவிடு

வெண்சங் கினில் பெய்து இலவு இதழ்மெல் விரலால் அமைத்து வளைநுதியால்

மிழற்று மனிநா வினை அடக்கிப்

பால் அன்று அருத்துக் கவுள் புடைவைப்

பதைத்தாய் கவுளில் நெரித்து ஊட்டிப்

பனிநீர் ஆட்டித் த்ாலாட்டிப்

பைம்பொன் திருத்தொட் டிவில் ஆட்டும்

கோலக் கழவி இதழ்ப்பவளம்

குவிப்பாய் முத்தம் தருகவே! கோவைத் திருவே! புதுவையின் பொற் கொடியே முத்தம் தருகவே!

(54)

ஆலந்தளிரிலையில் சிறு குழவியாக்கிடந்து அனைத்து உலகையும் வயிற்றுல் இட்டு வயிற்று (உதரக் கனல் வையத்து உயிர்களை எரிக்கா மல், ஆழியை அணிந்த அகன்ற கையைக் கிழக்குப் புறமாக வைத்த திரு மால் யசோதை மைந்தனான அன்று பாலூட்டினாள் அசோதை!

அப்போது உண்ட பால் செரியாது என்று, மேலாக்குக்குள் கண் ணன் ஆகிய சிறு விம்பத்தை மேலாடையால் மறைத்துக் கொண்டாய்! ஆழாக்கில் ஐந்தில் ஒரு பங்குப் பாலை வெண்சங்கில் ஊற்றி செம்முருக்க மலர் போன்ற செவ்விதழை மெல்லிய விரலால் அமைத்தாய்! சங்கின் துனியால் மழலை மிழற்றும் மணி நாவினை அடக்கிப் பால் அன்று