பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 130

இயலும் இயலுடன் இசையும் எழுவகை

இசையும் இசைபயில் நடமுமாம்

இனிய தமிழ்பயில் குருகை வருமகிழ்

இறைவர் திருமகள் வருகவே!

புயலின் மிசைஎழு மதியின் அகடுஉழு

புதிய மலர்விரி பொழில்கள்சூழ்

புதுவை மறையவர் அதிபன் அருள்மலி

புதிய திருமகள் வருகவே! (?4)

கயல்மீனையும் மாவின் வடுவையும் நஞ்சையும் மன்மதனது கொல்லுகின்ற அம்பாகிய மலரையும் மருளுகின்ற பெண்மானையும் போன்ற செருக்கிய கண்களையுடைய தேவ மகளிர் மகிழ்ச்சியால் உன் அடி தொழுவதற்கு வருக!

நான்முகனும் அவன் வழி வந்த முனிவர் அனைவரும் தேவர் குடி புகுகின்ற வானுலகத்தை ஆள்பவன் ஆகிய இந்திரனும் தூவுகின்ற நறிய மலரால் ஆகிய அணைமேல் அழகுடன் வருக!

இயல்தமிழும் அதனுடன் இசைந்தமிழும் ஏழுவகையாகிய சரிகம பதநி எனும் இசை (கரங்களும் இசை பயில்கின்ற நாடகத் தமிழும் ஆகிய இனிய முத்தமிழ் வழங்குகின்ற திருக்குருகூரில் தோன்றிய மகிழமலர் மாலை அணிந்த இறைவருக்குத் திருமகளே! வருக!

முகிலின் மேல் எழுகின்ற நிலவு நடு இடத்தைக் குத்துகின்ற (புதிய மலர்கள் விரிகின்ற) சோலைகள் சூழ்ந்த புதுவையில் அந்தணர் தலைவனாகிய பெரியாழ்வாரின் திருவருள் மலிந்த புதிய திருமகளே! வருகவே!

கரிய முகில்புரை அளக வணிதையர்

கரையில் இடுகலை அதனையே

களவி னொடுகவர் பொழுதில் எமதுஅணி

கலைகள் அருள்கென இருகையால்

அரிய.அடியினை இருவர் பணியவும்

அடையை உடைஎன அருளுவார்

அமலர் பரிபுர நதியர் குழகுஅமர்

அழகர் மழவிடை வரைஉளார்