உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 k பொழிப்புரை - த.கோவேந்தன்

தெரியல் நதி.என நதியுள் அரவணை திகழ ஒருதுயில் பழகுவார்

சிகர வடமலை முதல்வர் எனும் இவர் தினமும் மகிழ்த்ர வருகவே!

புரிசை வடவரை எனவும் இருசுடர் புவன மிசைவலம் வருவதோர்

புதுவை மறையவர் அதிபன் அருள்மவி

புதிய திருமகள் வருகவே [75]

கருமுகில் போன்ற கூந்தலையுடைய மகளிர், நீராடுகையில் பொய் கைக் கரையில் வைத்த ஆடைகளைக் களவால் கவர்ந்தவன் கண்ணன். அம் மகளிர், தங்களின் ஆடைகளை அருள்வாயாக என்றனர். அவர்கள் ஒருகையால் இரந்தனர்.

இருகையாலும் தொழுதால்தான்் தருவேன் என்று பிடிவாதம் செய்தான்் கண்ணன். அவனை ஏய்த்து ஆடை பெறுவதற்காக இரு மக எளிர் கூடி தத்தம் ஒற்றைக்கையால் அரையை மறைத்துக் கொண்டு, மற் றைய ஒவ்வொருகையையும் இணைத்து இருகையால் தொழுவதுபோல் தொழுதனர்.

கண்ணனுக்கு அவர்கள் சூழ்ச்சி தெரியும். ஆதலால், போலியாகத் தொழுததற்காகத் தாமரை இலையாகிய ஆடையை அருளினான்.

அந்தக் கண்ணன் இவ்வாறு மகளிரோடு விளையாடினாலும் மனக் களங்கம் சிறிதும் இல்லாதவன் (அமலன்) அதற்குச் சான்றாகச் சோலை மலையில் நூபுர கங்கை (சிலம்பாறு) உடையவன்.

இளமை குடி கொண்ட (மாறாத) அழகன். இடப மலையாகிய சோலைமலையில் உள்ளவன்.

காவிரியையே மாவையாக, இருபுறமும் சூழும்படி அதன் நடுவே அரவணை விளங்கும்படி அறிதுயில் பழகுபவன். முடிகளையுடைய வேங் கடமலை முதல்வன். இவன் நாடோறும் மகிழும்படி வருக!

(புதுவை நகரத்தின் மதில்களை வடமேரு மலை எனக் கருதி இரு சுடர்கள் உலகை வலம் வருகின்ற ஒப்பற்ற புதுவை அந்தணர் தலைவர் பெரியாழ்வார்க்குப் புதிய திருமகளே ஆண்டாளே! வருக!

பெருமாநிலத்தில் உதயகிரிப்

பேராற் றினுள்சேற் றிடைஅணுவாய்ப்

பிறந்து சிவப்புஎண் இரண்டு ஊழி

பெருகப் பெருகும் தனப்புறமாம்