பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 * பொழிப்புரை - த கோவேந்தன்

அஞ்சூட்டு வெள்ஓதி மப்பாகன் என உலகு அனைத்தையும் பெற்றதோற் றத்து

ஆரணப் பனுவல்பயில் காரணத் திசைமுகத்து

அயன்மவுலி மேல்வைத்த செம்

பஞ்சுஊட்டு சீறடிப் பிடிநடைத் துடி இடைப்

பவளவாய்க் குவளைஉண் கண்

பத்திநித் திலநகைப் பழுதுஇலா மதிமுகப்

பரிமளத் தளவமுகை தோய்

மஞ்சு ஊட்டு மென்குழல் பொற்கொம்பர் எனவாச

வண்துழாய் பெற்றது.ஒன்றாம்

மல்லிநாட்டு அனம் வருக! புத்தூர் விளங்கவரு

மழலைமென் குயில் வருக வே

(77)

சிவந்த உச்சிக் கொண்டையும் கூரிய துணியும் இரு கால்களையும், சிறகுகளையும் உடைய சேவற் கொடி கொண்ட முருகன், யானை முகத் தவன் ஆகிய இரு மைந்தரைப் பெற்றவன் சிவன். இந்த மூவரையும் உல கனைத்தையும் படைத்தவன் 'மறை நூல் பயின்ற மூலப் பொருளாகிய நான்முகன் அவன் அழகிய உச்சிக் கொண்டையுடைய வெள்ளை அன் னத்தை ஊர்தியாக உடையவன்'

அந்த நான்முகன் தன் தலை மேல் வைத்தது உன் திருவடி அத் திரு வடி செம்பஞ்சுக் குழம்பு பூசிச் சிவந்தது. அது சிற்றடி அந்த அடியின் நடை பிடி நடை

இடை, உடுக்கை போன்று நடுவு சுருங்கியது வாய் பவளம் போன்று சிவந்தது, மையுண்ட கண்கள் குவளை மலர் போன்றன. வரிசை யாக வைத்த முத்துப் போன்றன பற்கள் மறுவில்வாத குளிர்மதி போன்ற முகம.

மணமுடைய முல்லை மொட்டுப் பொருந்திய கூந்தல், அந்தக் கூந் தல் கருமுகில்ைக் குழைத்துப் பூசியது போன்று மெல்லியது பென்னா லான கொடி என்று கூறும்படி, வாசம் பொருந்திய வளவியதுழாய் பெற்ற ஒப்பற்ற மல்லிநாட்டு அன்னமே புத்தூர் விளங்க வந்தவளே! மழலை மொழி பேசும் மெல்லிய குயிலே! வருக! வருக!