பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அம்புலிப் பருவம்

காரணப் பாமாலை பாடியும் பூமாலை

கைபுனைந் தேசூடி யும்

காதலன் திருவுளம் உவப்பிக்க வந்தநம்

கைபிடித் திடும் அளவும். நீ

பூரணம் பயிலுமுழு மதியென்ன அமுதினைப்

பொழிகநற் கிரணங்க ளால் பொங்குவெந் தழலினைப் பொழியாய்கொல் என்றுஉனைப்

போற்றுகா ரியம்.நினைந் தோ,

சீர் அணங்கா யநின் தேவிமா ரோடுநீர்

திங்களைப் பிரியும் அள வில் சிதையாது இருந்ததிறம் உரையும் என உணரவோ,

தேவியரின் வருக என் நாள்

ஆரணம் தொழுதமிழ்ப் புதுவை ஆண்டாளுடன்

அம்புலி ஆடவா வே!

அரனும் இந் திரனும் நின்று அடிதொழும் கோதையுடன்

அம்புலி ஆடவா வே! (78) :

இறைவனை அடைவதற்குக் காரணமான பாமாலை பாடினேன்.

பூமாலையைக் கையால் புனைந்து குட்டினேன். என் காதலனாகிய திருமால் திருவுள்ளத்தை உவப்பிக்க வந்த எனது கைப்பிடித்திடும் வரைக்கும் - அம்புலியே! நீ நிறைவாகி விளங்கும் முழுமதியென அமுதினைப் பொழிவாயாக!

உன் கதிர்கள் நல்ல வை. அவற்றால் பொங்குகின்ற வெவ்விய நெருப்பினைப் பொழியாதே' என்று உன்னைப் போற்றுகின்ற செயலை நினைந்தோ? -

"சீரிய தெய்வப் பெண்களாகிய உன் தேவிமாராகிய இருப்பதேழு விண் மீன்களிடம் நீவிர்! நூம் கணவனாகிய திங்களைப் பிரிந் திருக்கும் போது மனம் வருந்தாமல் இருந்தவகை எப்படி? அதைக் கூறு வீர் என்று வினவித் எதிரிந்து கொள்ளவோ? தேவியாகிய ஆண்டாள் உன்னை உன் தேவியரோடு வருக! என்றாள்.