பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 152

கன்னலங் கழனியுள் கருமேதி கவடுபடு

கதிர்மருப் பால்உழக் கக்

கணுஉக்க நித்திலப் பருமனி தெரித்திடக்

காமர்விரி வளைகறங் கும்

பொன்னியுள் புனல்மண்டு திருமுகத் துறையில்ஒர்

புடையுள் குடம்பை அத னுள்

புள்உயிர்த் தனசினைகள் நெக்கதைக் கண்டுஏகு

பொன்இதழ்க் கமல்மே வும்

அன்னமென் பேடைதன் சினைகளைச் சிறகரால்

அருகுஅனைத் திடவிரைவில் வந்து அளியநன் சேவலும் தனதுநன் சிறகரால்

அதனையும் அனைத்துவா மும்

தென்னரங் கத்துஅமுதம் இன்பம்.உறும் அமுதமே!

சிறுசோறு இழைத்தருள்க வே! தேவர்ஆ ரமுதுஉண்ண உனகமகிழ்ந் தருள்கோதை!

சிறுசோறு இழைத்தருள்க (8.5)

கரும்பு வயலுள் கரிய எருமை தன் பிளவுபட்ட ஒளியுடைய கொம் பால் கலக்கும்போது, கரும்பின் கணுவிலிருந்து உதிர்ந்த பருத்த முத்து மணி அப்பால் தெறிக்கும். அதனால் அங்குள்ள அழகிய வரிசங்கு முழங்கும். அதனாள் காவேரியில் நீர் மண்டிய திருமுகத் துறையிலே ஒரு பக்கத்தில் பறவைகள் கட்டிய கூட்டினுள் அப் பறவைகள் ஈன்ற முட்டைகள் உடையும்.

ஒர் அன்னப்பேடை பொன் நிறத்து இதழ்களையுடைய தாமரை மலரில் தங்கியிருந்தது. அது தன் முட்டைகளும் உடைந்திருக்கலாம் என்று விரைந்து தன் கூட்டுக்கு ஏகியது. அங்குத் தன் முட்டைகள் சிதை யாமல் இருப்பது கண்டு, அவற்றைத் தன் சிறகுகளால் அருகில் இழுத்து அனைத்துக் கொண்டது. அதைக் கண்டு அதன்பால் அன்பு கொண்ட அன் னச் சேவலும் தன் நல்ல சிறகுகளால் அப் பேடையை முட்டையுடன் அணைத்து மகிழ்ந்தது. அத்தகைய வளமுடையது தென்னரங்கம்

அந்தத் தென்னரங்கத்து அமுதம் இன்பமுறும் அமுதமே! ஆண்டாளே சிறுசோறு சமைத்து விளையாடு தேவர்கள் அரிய அமுது உண்பதற்காக, மன மகிழ்ந்து அருள்கின்ற கோதையே! சிறுசோறு சமைத்து விளையாடு!