பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 ல் பொழிப்புரை - த கோவேந்தன்

இத்தகைய அற்புதக் காட்சியும் செயலும் கொண்ட திருமுக்குளத் துறையும், மணம்கமழும் மெல்லிய வேறு பல தாமரைத் த்டாகங்களும் செறிந்த தமிழ் வழங்கும் புதுவையாய்! ஆண்டாளே பொன்னுரசல் உந்தி ஆடி அருள் பொன்அரங்கத்தர் வடமலைவாணர் இன்பமுறம் கோதையே பொன்னுரசல் ஆடிடுவாய்!

தன்நிலை தனக்கு உரிய வாய்ஒருவர் முன்னம்

சமைத்திடா முதன்மையது வாய்ச்

சகலகலை களையும்வழு வறஉணர்த் தியதொரு

சயம்புஉருவ ஞானமய மாய்

முன்னிய மறைப்பனுவ லைக்கொண்டு பாதாள

முந்நீருள் புக்குஒளிக் கும் முதியமது கைடவர் முரண்தொலைத் திட உலகம்

மூன்றும்ஒரு செலுவுள் உறை வான் மன்னிய புறப்பெரிய மீன்வடிவ் மாய்அமர்

மலைந்துஎளிதி னில்கொண்ட நாள் மறைமுழுது மீனவடி வினைமாற்றி நான்முகன்

மனத்துற மறித்துஉணர்த் தும்

பொன்னியுள் சேவல்ஒ திமம் உயிர் தளிர்த்திடப்

பொன்னூசல் ஆடியரு ளே!

புதுவைத் துழாய்வனத் துள் பேடை அன்னமே!

பொன்னூசல் ஆடியரு ளே! (106]

தான்் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் தான்ேயானது திருமறை. முன்னம் ஒருவரால் படைக்கப் படாதது, அது முதன்மையானது. கலைகள் அனைத்தையும் குற்றம் அறும் படி உணர்த்தியது. (சயம்பு - சுவயம்பு உருவானது) அதாவது தான்ே உதித்தது. மெய்யறிவு மயம் ஆனது. இத்தகையதென்று எல்லோரும் எண்ணிக் கொண்டாடிய மறைநூலைக் கவர்ந்து கீழுலகில் (பாதாளமாய் ஆழமான கடலுள் புகுந்து ஒளித்தனர். பழமையான மது, கைடவர் என்பார் இருவர். அவர்களின் மாறுபாடு(வலிமை) தொலைத்திடுவதற்காகத் திருமால், உலகம் மூன்றும் ஒரு செதிலுக்குள் உறையும்படி நிலைபெற்ற முதுகையுடைய பெரியமின் (மச்ச வடிவமாகி, அவருடன் போர் புரிந்து எளிதாக மேலே கொண்டு வந்த காலத்தே, எடுத்த மீன் உருவத்தை மாற்றி,